Home
Mobile

Xiaomi-யின் குட்டி போன்.. 190 கிராம், Snapdragon 8 Elite சிப், 5100mAh பேட்டரி, IPX8 ரேட்டிங், 50MP OIS கேமரா!

என்னப்பா ஒன்பிளஸ், விவோவை போல ஷாவ்மீயும் "மினி - காம்பாக்ட்" ஸ்மார்ட்போனை ரிலீஸ் செய்ய போகுதா என்று கேட்டு விடாதீர்கள். இது ஷாவ்மீயின் அடுத்த பிளிப் போன் ஆகும். டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள புதிய தகவலின்படி, ஷாவ்மீ நிறுவனம் அதன் அடுத்த கிளாம்ஷெல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 மாடலை 2025 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

இது ரெட்மி கே80 எக்ஸ்ட்ரீம் எடிஷன் (Redmi K80 Extreme Edition) மற்றும் ரெட்மியின் காம்பாக்ட் கேமிங் டேப்லெட் உள்ளிட்ட பிற ஷாவ்மீ தயாரிப்புகளுடன் 2025 ஜூன் இல் அறிமுகமாகும் என்று . இருப்பினும், ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு தனி நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi-யின் குட்டி போன்.. 190 கிராம், Snapdragon 8 Elite சிப்!

ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டால் இயக்கப்படும். முந்தைய ஆண்டுகளை போலல்லாமல், ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 மாடல் ஆனது 2025 ஆம் ஆண்டில் ஷாவ்மீ நிறுவனத்தின் ஒரே மடிக்கக்கூடிய போனாக இருக்கும், ஏனெனில் ஷாவ்மீ மிக்ஸ் போல்ட் 4-ஐ அறிமுகப்படுத்த எந்த திட்டமும் இல்லை.

ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.85-இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது விரிக்கப்படும்போது 7.6mm ஆக மற்றும் சுமார் 190 கிராம் எடையுள்ளதாக இருக்கும், இது அதன் முன்னோடியை விட மெல்லியதாகவும் இலகுவாகவும் இருக்கும்.

இது 67W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,100mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை இது OIS உடன் 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா-வைட் கேமராவை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் அம்சங்களில் ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் மற்றும் ஐபிஎக்ஸ்8 நீர் எதிர்ப்பு ரேட்டிங் ஆகியவைகளை கூறலாம்.

ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 ஏற்கனவே சீனாவில் 3சி சான்றிதழை பெற்றுள்ளது, இது அதன் உடனடி வெளியீட்டை உறுதிப்படுத்துகிறது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஷாவ்மீ மிக்ஸ் பிளிப் 2 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு ஜூலை மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் ரெட்மி கே80 எக்ஸ்ட்ரீம் எடிஷன் ஸ்மார்ட்போன் சீனாவிற்கு மட்டுமே பிரத்தியேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய மாறுபாடு ஷாவ்மீ 15டி ப்ரோ (Xiaomi 15T Pro) ஆக அறிமுகப்படுத்தப்படலாம்.

சமீபத்தில் அறிமுகமான ஷாவ்மீ 15எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 2கே ரெசல்யூஷன் கொண்ட OLED டிஸ்பிளே
- ஸிரிங் ஓ1 சிப்செட்
- 16GB LPDDR5T ரேம்
- 1TB வரை UFS 4.1 ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா செட்டப்
- பெரிய 6,100mAh பேட்டரி
- 90W பாஸ்ட் வயர்டு சார்ஜிங்
-50W வயர்லெஸ் சார்ஜிங்
- IP68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்

சமீபத்தில் அறிமுகமான ஷாவ்மீ ஸிரிங் ஓ1 ஓஎஸ்-ல் என்ன ஸ்பெஷல்? இது மேம்பட்ட 3என்எம் தொழில்நுட்பத்தை (Advanced 3nm technology) பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் ஸிரிங் ஓ1 அறிமுகம் செய்யப்பட்ட அதே மேடையில் அறிமுகமான ஷாவ்மீ நிறுவனத்தின் 2 புதிய பிளாக்ஷிப் டிவைஸ்களில் பயன்படுத்தப்படும் உள்ளது. ஸிரிங் ஓ1 சிப்செட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்? எந்தெந்த டிவைஸ்களில் ஸிரிங் ஓ1 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

ஸிரிங் ஓ1 சிப், ஆப்பிளின் சிப்களுக்கு பின்னால் உள்ள அதே ஃபவுண்டரியான TSMC ஆல் அதன் இரண்டாம் தலைமுறை 3என்எம் செயல்முறையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது நல்ல பேட்டரி செயல்திறனுடன் திடமான செயல்திறனை வழங்க வேண்டும். மேலும் ஸிரிங் ஓ1 ஆனது 10-கோர் CPU மற்றும் 16-கோர் Immortalis-G925 GPU-வை கொண்டுள்ளது. அதாவது இப்போதைக்கு இதுதான் மிகவும் சக்திவாய்ந்த மொபைல் சிப்செட்களில் (Most powerful mobile chipset) ஒன்றாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mix Flip 2 Clamshell Foldable Phone With Snapdragon 8 Elite Launching in June 2025 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X