பட்டியல் : 2012 - 2017 வரை எந்தெந்த சியோமி கருவிகளுக்கு மியூஐ 9 அப்டேட் கிடைக்கும்.?

கடந்த 2012 முதல் தற்போது வரை (2017) விற்பனைக்கு வந்த பல சியோமி ஸ்மார்ட்போன்கள் மியூஐ9 மேம்படுத்தல் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

|

சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ நோட் 4 மற்றும் மி மேக்ஸ் 2 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு அதன் புதிய மியூஐ9 மேம்படுத்தலை கடந்த வாரம் உருட்ட தொடங்கியது. இந்த சாதனங்களின் பயனர்கள் ஒடிஏ வழியாக புதுப்பிப்பை பதிவிறக்கலாம் அல்லது நிறுவனத்தின் பிளாட்பார்மில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் நிலையான புதுப்பிப்பை ப்ளாஷ் செய்யலாம்.

2012 - 2017 வரை எந்தெந்த சியோமி கருவிகளுக்கு மியூஐ 9 அப்டேட்.?

இந்த இரண்டு கருவிகள் தவிர்த்து வேறென்ன கருவிகள், இம்மாத இறுதியில் மியூஐ 9 மேம்படுத்தல் பெறும் என்பதை தற்போது சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கடந்த 2012 முதல் தற்போது வரை (2017) விற்பனைக்கு வந்த பல சியோமி ஸ்மார்ட்போன்கள் மியூஐ9 மேம்படுத்தல் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்டேட் செய்ய தொடங்குவதற்கு முன்னர், பயனர்கள் தங்கள் மொபைல் தரவுகளை பேக் அப் எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பெரும்பாலான சியோமி சாதனங்களுக்கு.!

பெரும்பாலான சியோமி சாதனங்களுக்கு.!

இந்த புதிய மென்பொருள் சமீபத்தில் அறிமுகமான சியோமி ரெட்மீ Y1 மற்றும் ரெட்மீ Y1 லைட் கருவியானது நவம்பர் மாத இறுதியில் மேம்படுத்தல் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலிவு விலையில் அறிமுகமான இந்த 2 சாதங்களிலுமே மியூஐ9 மேம்படுத்தல் கிடைக்கும் என்பதால், பெரும்பாலான சியோமி சாதனங்களுக்கும் இந்த மாதத்திற்குள் மேம்படுத்தல் கிடைக்கப்பெறலாம்.

பல பாணிகளில் அறிவிப்புகளை பெறலாம்.!

பல பாணிகளில் அறிவிப்புகளை பெறலாம்.!

மியூஐ9 (MIUI 9) அப்டேட் ஆனது நோட்டிபிகேஷன் ஷேட்களில் மாற்றங்களைச் செய்கிறது. இதன் மூலம் பயனர்கள் பல பாணிகளில் அறிவிப்புகளை பெறலாம். அதாவது குறிப்பிட்ட பயன்பாடுடன் இணங்கி தொகுக்கப்படும். உடன் ஸ்பிலிட் ஸ்க்ரீன், ஐகான் அனிமேஷன்கள் ஆகியவைகளும் புதிய மியூஐ9 உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் போட்டோ எடிட்டிங் அம்சம்.!

ஸ்மார்ட் போட்டோ எடிட்டிங் அம்சம்.!

மேலும் இதன் ஸ்மார்ட் போட்டோ எடிட்டிங் போன்ற அம்சங்கள், மிகவும் தொந்தரவு இல்லாமல் படங்களில் உள்ள பின்னணி கவனச்சிதறல்களை எடிட் செய்ய அனுமதிக்கும். உடன் கூகுள் நௌ லான்ச்சரை போலவே குறுக்குவழிகளைத் திறக்க வலதுபுறமாக ஸ்வைப் செய்யும் அம்சமும் கொண்டுள்ளது. இதன் மி வீடியோ ஆப் ஆனது இப்போது பிரபலமான வீடியோ வடிவங்களை ஆதரிக்கிறது மேலும் வீடியோக்களை தானாகவே தொகுக்கவும் உதவுகிறது.

இந்தியாவை மையமாக கொண்ட அம்சங்கள்.!

இந்தியாவை மையமாக கொண்ட அம்சங்கள்.!

மேலும் இந்த புதிய அப்டேட்டில் பல்வேறு இந்தியாவை மையமாக கொண்ட அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அட்டை வடிவில் டெக்ஸ்ட் செய்திகளுடன் ஐஆர்சிடிசி டிக்கெட் விவரங்கள் பெறப்படும். இந்திய திருவிழாக்கள் மி காலண்டர் விண்ணப்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை அடிப்படையாக கொண்ட ஒரு புதிய வரம்பற்ற தீம் சேர்க்கப்பட்டுள்ளது.

2012 முதல் 2015 வரை.!

2012 முதல் 2015 வரை.!

2015-ல் அறிமுகமான மி நோட், மி 4ஐ, ரெட்மீ 2, ரெட்மீ 2 ப்ரைம், ரெட்மீ நோட் 4ஜி, ரெட்மீ நோட் 2; 2014-ல் அறிமுகமான மி 4, ரெட்மீ நோட் 4ஜி; 2013-ல் அறிமுகமான மி 3 மற்றும் 2012-ல் அறிமுகமான மி 2 ஆகிய கருவிகள் இம்மாத இறுதியில் அப்டேட் பெற தொடங்கும்.

2016-ல் அறிமுகமான கருவிகள்.!

2016-ல் அறிமுகமான கருவிகள்.!

2016-ல் அறிமுகமான மி மிக்ஸ், மி நோட் 2, மி 5, மி 5எஸ், மி 5எஸ் ப்ளஸ், மி மேக்ஸ், மி மேக்ஸ் ப்ரைம், ரெட்மீ நோட் 3, ரெட்மீ 3, ரெட்மீ 3எஸ், ரெட்மீ 4, ரெட்மீ 4ஏ ஆகிய கருவிகள் இம்மாத இறுதியில் அப்டேட் பெற தொடங்கும்.

2017-ல் அறிமுகமான கருவிகள்.!

2017-ல் அறிமுகமான கருவிகள்.!

சமீபத்தில் அறிமுகமான கருவிகளை பொறுத்தமட்டில், மி மிக்ஸ் 2, மி நோட் 3, மி 6, மி மேக்ஸ் 2, ரெட்மீ நோட் 4, ரெட்மீ நோட் 4எக்ஸ், ரெட்மீ நோட் 5ஏ, ரெட்மீ 4, ரெட்மீ Y1 மற்றும் ரெட்மீ Y1எஸ் ஆகிய கருவிகள் இம்மாத இறுதியில் அப்டேட் பெற தொடங்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi MIUI 9 update: List of devices that will recieve the update. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X