ஆண்ட்ராய்டு 7.1.1, ஸ்னாப்டிராகன் 660 உடன் வெளிவரும் சியோமி எம்ஐ6சி.!
சியோமி எம்ஐ6சி : 5.1அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!
சியோமி நிறுவனம் பல்வேறு மொபைல்மாடல்களை வெளியிட்டுள்ளது. மேலும் இவற்றில் வந்த மாடல்கள் அனைத்தும் பரவலான புகழ் பெற்றது. இவற்றில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் அடங்கியள்ளது,
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட சியோமி எம்6 மொபைல் பொருத்தமாட்டில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது, மேலும் விற்ப்பனையில் அதிக லாபாம் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்தது. அந்த வரிசையில் அடுத்து வருவது சியோமி எம்ஐ6சி இவை பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.1அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் இதனுடன் 2.5டி கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ6சி சாப்ட்வேர்:
சியோமி எம்ஐ6சி பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 2.2ஜிஎச்இசெட் ஆக்டோகோர், ஸ்னாப்ட்ராகன் 660 சிபியு, ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இவை இயக்கப்படுகிறது.

சியோமி எம்ஐ6சி சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 6 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேமரா:
சியோமி எம்ஐ6சி பொருத்தவரை பின்புற கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 4 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

கேமரா சென்சார்:
சியோமி எம்ஐ6சி பொருத்தப்பட்டுள்ள சென்சார் மிக வேகமாக இயங்கும் தன்மை கொண்டவை, மேலும் புகைப்படங்களை மிகத்தெளிவாக பிடிக்கும் திறமைக் கொண்டவை. 4கே வீடியோ பதிவு, இதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் ஆகும்.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் 4.0 , ஜிபிஎஸ்,யுஎஸ்பி, வோல்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications