சியோமி டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499-ஆக உள்ளது.
சியோமி நிறுவனம் மி சூப்பர் சேல் என்ற பெயரில் ஸ்மார்ட்போன், டிவி, உட்பட பல்வேறு பொருட்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகை இன்று முதல் வரும் மே31-ம் தேதி வரை வழங்கப்படுகிறது என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அட்டகாசமான சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலைகுறைப்பு:
குறிப்பாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது சலுகையில் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.5,500-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, பின்பு சியோமி ரெட்மி வைய்3, ரெட்மி 7, ரெட்மி நோட் 5ப்ரோ, ரெட்மி 6ஏ போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் பல்வேறு சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சியோமி நிறுவனத்தின் மி டிவி மாடல்களுக்கு ரூ.7000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. இது தவிர ஐசிஐசிஐ வங்கியின் கிரேடிட் கார்டு பயன்படுத்தி ரெட்மி போன்கள் வாங்குபவர்களுக்கு 5 சதவீத கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சியோமி ரெட்மி 6:
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி 6 ப்ரோ:
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-ஆக உள்ளது.

ரெட்மி நோட் 5 ப்ரோ:
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-ஆக உள்ளது.

ரெட்மி நோட் 6 ப்ரோ:
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது,தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-ஆக உள்ளது.

போகோ எப்1:
சியோமி நிறுவனத்தின் போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.21,999-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-ஆக உள்ளது. மேலும வயர்லெஸ் இயர்போன், ப்ளூடூதை் ஹெட்போன் போன்ற பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications