Xiaomi Mi Super Sale: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை.!
சமீபத்தில் சியோமி நிறுவனம் பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் சிறப்பு சலுகைகளை வழங்கியது, இந்த சிறப்பு சலுகைகளில் நீங்கள் சியோமி ஸ்மார்ட்போன் வாங்கவில்லை என்றால், உங்களுக்கு அடுத்த ஒரு வாய்ப்பு கூட இருக்கிறது.

ஜனவரி 31-ம் தேதி வரை இருக்கும்
அதாவது சியோமி வலைதளத்தில் Xiaomi Mi Super Sale எனும் தலைப்பில் அருமையானசியோமி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது, எனவே இந்த சலுகைகளை மக்கள் அருமையாகபயன்படுத்தலாம். குறிப்பாக சியோமி வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு சலுiயானது ஜனவரி 27-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி கே20
இந்த சிறப்பு சலுகையில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போனுக்கு
விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6ஜிபி
ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-விலையில்வாங்கக் கிடைக்கும்.

சியோமி ரெட்மி கே20ப்ரோ
சியோமி வழங்கும் இந்த சிறப்பு சலுகையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20ப்ரோ மாடலைரூ.24,999-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20ப்ரோ மாடல் ரூ.27,999-விலையிலும்வாங்க முடியும்.

சியோமி ரெட்மி நோட்8
சியோமி நிறுவனம் வழங்கும் இந்த அட்டகாசமான சலுகையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட்8ஸ்மார்ட்போனை ரூ.9,999-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட்8 மாடலை ரூ.12,999-விலையிலும் வாங்க முடியும்.

சியோமி ரெட்மி நோட்8 ப்ரோ
இந்த சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட்8 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட்8 ப்ரோ மாடலை ரூ.15,999-விலையிலும் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு எக்சேஞ்ஜ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி நோட் 7ப்ரோ
சியோமி நிறுவனம் வழங்கும் இந்த அட்டகாசமான சலுகையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோஸ்மார்ட்போனை ரூ.9,999-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ மாடலை ரூ.10,999-விலையிலும்வாங்க முடியும். அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனை ரூ.8,999விலையிலும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் மாடலை ரூ.9,999-விலையிலும்
வாங்க முடியும்.

ரெட்மி கோ
இந்த சிறப்பு விற்பனையில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 7ஏ மாடலை ரூ.5,499-விலையிலும்,1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கோ ஸ்மார்ட்போனை ரூ.4,999-விலையிலும் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








