பட்ஜெட் விலையில் சியோமி மி பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சியோமி மி பிளே ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சீனாவில் சியோமி மி பிளே ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது சியோமி நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சியோமி மி பிளே ஸ்மார்ட்போன் மாடல் வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி பிளே ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சமங்கள், டூயல் ரியர் கேமரா மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.84-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080×2280 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது சியோமி மி பிளே ஸ்மார்ட்போன்.

சேமிப்பு:
சியோமி மி பிளே ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 12எம்பி+12எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மீடியாடெக்:
சியோமி மி பிளே ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம். பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்
சியோமி மி பிளே ஸ்மார்ட்போன் மாடல்.

பேட்டரி-விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, பின்பு சியோமி மி பிளே ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.11,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications