Home
Mobile

மே 31-ல் மொத்தம் மூன்று சர்ப்ரைஸ்; சியோமி ரெடி, நீங்க ரெடியா.?

இந்த மே மாத இறுதியில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, அதன் மிக பெரிய வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடத்தவுள்ளது.

By Muthuraj

இந்த மே மாத இறுதியில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, அதன் மிக பெரிய வெளியீட்டு நிகழ்வு ஒன்றை நடத்தவுள்ளது. மே 31 அன்று நடக்கும் இந்த நிகழ்வில் நிறுவனத்தின் எட்டாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மி8 ஸ்மார்ட்போன் வெளியாகும் என்பதை சியோமி உறுதி செய்துவிட்ட நிலைப்பாட்டில், அதனுடன் சேர்ந்து மேலுமொரு ஸ்மார்ட்போனும் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

உடனே அது, சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அது இல்லை. வேறு என்ன ஸ்மார்ட்போன்.? அது சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனா.? இல்லை சியோமியின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றா.?

சியோமி மி நோட் 5 ஸ்மார்ட்போன் ஆகும்.!

சியோமி மி நோட் 5 ஸ்மார்ட்போன் ஆகும்.!

மி8 உடன் வெளியாகப்போவது, நிச்சயமாக ஒரு தலைமை ஸ்மார்ட்போன் தான். அது கடந்த ஆண்டு முதலே வதந்திக்கப்படும் நிறுவனத்தின் சியோமி மி நோட் 5 ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய விற்பனை புள்ளியாய் திகழப்போவது அதன் விலையும் மற்றும் விலைக்கு சம்பந்தம் இல்லாத அட்டகாசமான அம்சங்களும் தான்.

'ஜம்ப்' அடிக்க காரணம் என்ன.?

'ஜம்ப்' அடிக்க காரணம் என்ன.?

வெளியாகப்போகும் சியோமி மி நோட் 5 ஆனது, மி நித 3 ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் பதிப்பாகும். எட்டாம் ஆண்டு நினைவாக மி7 ஸ்மார்ட்போனை தவிர்த்துவிட்டு, சியோமி நிறுவனம் நேரடியாக அதன் மி8 ஸ்மார்ட்போனை வெளிக்கிடுகிறது என்பதெல்லாம் சரி, சியோமி ஏன் மி நோட் 4 ஸ்மார்ட்போனை தவிர்த்து விட்டு மி நோட் 5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.? - அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், எண் 4 என்பது 'சீனாவில் அதிர்ஷ்டம் இல்லாத ஒரு எண்ணாக கருதப்படுகிறது. அதுவே சியோமி மி நோட் 4 ஸ்மார்ட்போனை கைவிடுதலுக்கு முக்கிய காரணமாகும்.

பெயரா முக்கியம்.? அம்சங்களும் விலையும் தானே முக்கியம்.!

பெயரா முக்கியம்.? அம்சங்களும் விலையும் தானே முக்கியம்.!

சியோமி மி நோட் 5 ஸ்மார்ட்போனின் லீக்ஸ் அம்சங்களை பொறுத்தவரை, இது புல் ஸ்கிரீன் 2.0 வடிவமைப்புடன் 5.99 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும். இதன் வடிவமைப்பானது, எந்தவொரு சியோமி ரெட்மீ 5 வரிசையிலும், மி மிக்ஸ் வரிசையிலும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு.!

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு.!

கடந்த ஆண்டு வெளியான க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 835 சிப்செட் உடனாக 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்பட்டு இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ பேன்டஸ் மற்றும் 4 ஆக்சிஸ் ஆப்டிகல் ஸ்டெபிலைசேஷனும் வருகிறது.துரதிருஷ்டவசமாக, கேமரா பற்றிய விவரக்குறிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.?

விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.?

கேமரா அம்சங்கள் மட்டுமின்றி, மி நோட் 5 பற்றிய போதுமான விவரங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் சியோமி மி நோட் 5 (Xiaomi Mi Note 5) ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.24,200/- என்கிற புள்ளியை எட்டும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இது கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பிரதான சிப்செட் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போனிற்கான ஒரு கெளரவமான விலையாகும்.

வேறொன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.?

வேறொன்றும் எதிர்பார்க்கப்படுகிறது.?

இதன் கேமராக்கள் முதன்மை அம்சமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது எந்த அளவிற்கு உண்மை என்பது மே 31 நிகழ்வில் தெரிந்து விடும். இந்த நிகழ்வில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, நிறுவனத்தின் ஐஓடி தயாரிப்புகளும் வெளியாகலாம். அதாவது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மி பேண்ட் 3 ஃபிட்னஸ் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 5 With 43 LTE Bands Support Could Launch Alongside Mi 8 on May 31. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X