அடுத்து வரும் சியோமி ஸ்மார்ட்போன் ஒன்றில் எதிர்பார்க்காத அம்சங்கள் இடம்பெறுகிறது.!?
கருவியின் முன்பக்கத்தில் ஒரு கைரேகை ஸ்கேனரை ஒருங்கிணைக்கக்கூடிய ஸ்கிரீனின் கீழே ஹோம் பொத்தான் உள்ளது.
சீனாவின் சந்தைக்கு வெளியே சியோமி மி நோட் 2 ஸ்மார்ட்போன் இன்னும் கிடைக்காத பட்சத்தில் ஒரு புதிய கசிவு சியோமி நிறுவனம் ஏற்கனவே அதன் அடுத்த கருவியான மி நோட் 3 சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் எந்தவொரு அந்நிய கருவியை விடவும் நன்மதிப்பை பெறும் நிறுவனமாய் சியோமி திகழ்கிறது. அதை மேலும் வலுப்படுத்தும் ஒரு கருவியாய் மிகவும் புதுமையான அம்சம் கொண்டு களத்தில் இறங்கவுள்ளது - சியோமி மி நோட் 3. இந்த புத்தம் புதிய சியோமி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஆண்டு அக்டோபரில் மாதத்தில் தொடங்கப்பட்ட மி நோட் 2 கருவியின் மேம்படுத்தல் சாதனமாகும்.

ஹோம் பொத்தான்
வெளியான தகவலில் (அக்கருவியின் ஒரு குறைந்த தெளிவுத்திறன் படம் கசிந்துள்ளது) இருந்து கூறப்படும் மி நோட் 3 அதனடிப்படையில் கருவியின் முன்பக்கத்தில் ஒரு கைரேகை ஸ்கேனரை ஒருங்கிணைக்கக்கூடிய ஸ்கிரீனின் கீழே ஹோம் பொத்தான் உள்ளது.

கேமரா
மி நோட் 3 கருவியின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றாக மி 6-ல் ஏற்கனவே கண்டது போல தோற்றமளிக்கும் இரட்டை-பின்புற கேமரா அமைப்பை இக்கருவி கொண்டுள்ளது.

6ஜிபி ரேம்
உடன் வெளியான சில லீக்ஸ் தகவல்களின் கீழ் மி நோட் 3 ஒரு 5.7-அங்குல அமோஎல்இடி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 820 எஸ்ஓசி, 6ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு மற்றும் 4000எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம்.

12 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா
மேலும், இக்கருவி ஒரு 8-மெகாபிக்சல் முன்பக்க கேமராவுடன் 12 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமராக்கள் கோடனிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லீக்ஸ் தகவல்களை மொபில்எக்ஸ்போஸ் பகிர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சியோமி மி நோட் 2
நினைவூட்டும் வண்ணம் கடந்த வருடம் சியோமி மி நோட் 2 மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது :சுமார் ரூ.27,600/-க்கு 4 ஜிபி ரேம் / 64 ஜிபி சேமிப்பு பதிப்பு, சுமார் ரூ.32,600/-க்கு 6 ஜிபி ரேம் / 128 ஜிபி சேமிப்பு பதிப்பு, சுமார் ரூ.34,500/-க்கு 6 ஜிபி ரேம் / 128 ஜிபி சேமிப்பு கொண்ட க்ளோபல் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications