நோக்கியாவை ஓரங்கட்டுங்க, சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போனை பாருங்க.!
வால்யூம் மற்றும் பவர் பொத்தான்கள் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் காணலாம். மேலும் மி நோட் 3 ஒரு வளைந்த காட்சி கொண்டு வரும் என்று தெரிகிறது.
நாளுக்கு நாள் இந்தியாவில் பிரபலமடைந்து கொண்டே போகும் சியோமி நிறுவனம் மி நோட் 3 என்று அழைக்கப்படும் அதன் அடுத்த தலைமுறை சாதனம் சார்ந்த வேலையில் பணியாற்றி வருகிறது என்பது வெளிப்படை.

இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் மூலம் டூயல் கர்வுடு அமோஎல்இடி காட்சி பெறும் என்று முன்னர் வெளியான அறிக்கையொன்று தெரிவிக்கும் நிலையில் இப்போது ஆண்ட்ராய்டு ஹெட்ச்லைன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை படி மி நோட் 3 கருவி சார்ந்த பல அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
கியர்பீட் மூலம் வெளியான இந்த கசிவு சாதனத்தின் முன் பக்கத்தைக் காட்டுகிறது. வால்யூம் மற்றும் பவர் பொத்தான்கள் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் காணலாம். மேலும் மி நோட் 3 ஒரு வளைந்த காட்சி கொண்டு வரும் என்று தெரிகிறது.

கைரேகை சென்சார்
மேலும் வரவிருக்கும் சாதனம் ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இயக்க முறைமையில் இயக்கப்படும் மற்றும் 12 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டிருக்கும். இந்த சாதனம் பிளாக், தங்கம் மற்றும் வெள்ளி வண்ண வகைகளில் வெளிவரலாம். மேலும் சாதனத்தின் அடிப்பகுதியில் கைரேகை சென்சார் ஒன்றையும் காணலாம்.

அமோஎல்இடி டிஸ்ப்ளே
சில முந்தைய வதந்திகளின்படி மி நோட் 3 ஆனது ஒரு 5.7-அங்குல க்யூஎச்டி கர்வுடு அமோஎல்இடி டிஸ்ப்ளேயுடன் 2560 x 1440 பிக்சல்கள் கொண்ட திரை தீர்மானம் கொண்டிருக்கும்.இரண்டு வகைகளில் வெளியாகலாம்.

ரேம்
அதாவது 6 ஜிபி ரேம் மற்றும் 128 உள்ளடக்க சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் 256ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டிருக்கலாம். மேலும் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் க்வால்காம் பாஸ்ட் விரைவு சார்ஜ் 4.0 வேகமாக சார்ஜ் தொழில்நுட்பத்துடனான 4070எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி கொண்டிருக்கலாம்.

விலை நிர்ணயம்
சியோமி மி நோட் 3 ஆனது சியோமி மியூஐ (MIUI) 9 ஓஎஸ் கொண்டு இயங்கும் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். மேலும் அறிக்கையின்படி இக்கருவியின் 6ஜிபி மாறுபாடு தோராயமாக ரூ.38,893/- மற்றும் இதன் 8ஜிபி மாறுபாடு சுமார் ரூ.45,333/- என்ற விலை நிர்ணயம் பெறலாம்.

கேமரா தீர்மானம்
முந்தைய அறிக்கையின்படி, மி நோட் 3 அதன் முன்னோடியான மி நோட் 2 போன்றே ஒரு வளைந்த காட்சி கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இக்கருவி சக்திவாய்ந்த க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் ஆக்டா-கோர் செயலி மூலம் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மி நோட் 3 ஆனது இரட்டை கேமரா அமைப்புடன் வர இருப்பதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் கேமரா தீர்மானம் பற்றி எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications