அறிமுகம் : மிரட்டலான மி நோட் 3 ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடு.!

|

சியோமி நிறுவனம், சீனாவில் அதன் மி நோட் 3 ஸ்மார்ட்போனை இரண்டு சேமிப்பு மாதிரிகளில் - 64 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 6 ஜிபி ரேம் - கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது.

அறிமுகம் : மிரட்டலான மி நோட் 3 ஸ்மார்ட்போனின் புதிய மாறுபாடு.!

இப்போது சியோமி நிறுவனம் அதே ஸ்மார்ட்போனின் மற்றொரு சேமிப்பு மாதிரியை - 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு - அறிமுகம் செய்துள்ள. சீனாவில் 1,999 யுவான் என்ற விலைக்கு விற்பனைக்கு வந்துள்ள இக்கருவியின் இந்திய மதிப்பீடு சுமார் ரூ.19,595 ஆகும். இந்த புதிய மாறுபாடு நீல வண்ணத்தில் வருகிறது மற்றும் நவம்பர் 23 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

முந்தைய சேமிப்பு மாதிரிகள் மற்றும் விலை

முந்தைய சேமிப்பு மாதிரிகள் மற்றும் விலை

கருப்பு மற்றும் நீல நிற மாறுபாடுகளில் கிடைக்கும் மி நோட் 3 ஸ்மார்ட்போனின் தற்போதுள்ள சேமிப்பு மாதிரிகளின் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், அதன் 64 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.24,498/- என்ற புள்ளியை பெற்றுள்ள மறுகையில் அதன் 128 ஜிபி (பிளாக் மாறுபாடு) ரூ.28,420/- என்ற விலைக்கும், ப்ளூ வேரியண்ட் ரூ.29,400/- என்ற விலைக்கும் விற்கப்படுகிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

நினைவக கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தை தவிர, இதர அனைத்து வகையான அம்சங்களும் முந்தைய மாதிரிகளில் இருப்பது போன்றே தான் இருக்கும். அதாவது, மி நோட் 3 ஆனது ஒரு நான்கு பக்க வளைந்த கண்ணாடி உடல் கொண்டுருக்கும் மற்றும் ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே (1920 x 1080 பிக்சல் தீர்மானம்) கொண்டுருக்கும்.

செயலி மற்றும் கைரேகை ஸ்கேனர்

செயலி மற்றும் கைரேகை ஸ்கேனர்

மேலும் ஒரு 64 பிட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா-கோர் செயலி மற்றும் அட்ரெனோ 540 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது. மி நோட் 3 ஆனது ஒரு வளைந்த பின்புறம் கொண்டுள்ளதோடு, அதன் முன்பக்கத்தில் கிழே முன்எதிர்கொள்ளும் கைரேகை ஸ்கேனர் ஒன்றையும் கொண்டுள்ளது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

இரட்டை பின்புற கேமரா அமைப்பு

கேமராவை பொறுத்தமட்டில், சியோமி மி நோட் 3 ஆனது 1.25மைக்ரோமீட்டர் பிக்சல் அளவு, எப் / 1.8 துளை, டூயல் டோன் எல்இடி ப்ளாஷ், 4-ஆக்சிஸ் ஓஐஎஸ், 4கே வீடியோ பதிவு ஆகிய திறன்களை கொண்ட ஒரு 12 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் 52 மிமீ போர்ட்ரெயிட் லென்ஸ், எப் / 2.6 துளை, 1.25மைக்ரோமீட்டர் பிக்சல் அளவு கொண்ட 12 எம்பி டெலி லென்ஸ் என்ற இரண்டாம் நிலை கேமரா ஒன்றும் (இரட்டை பின்புற கேமரா அமைப்பு) கொண்டுள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ அழைப்பு

செல்பீ மற்றும் வீடியோ அழைப்பு

முன்பக்கம் செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 2மைக்ரோமீட்டர் பிக்சல் அளவு கொண்ட 16 மெகாபிக்சல் கேமரா கொண்டு வருகிறது மற்றும் இந்த கேமரா செயற்கை நுண்ணறிவு கொண்டு அழகுபடுத்தும் விருப்பங்களையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆர்ட்பிஷியல் இன்டெலிஜென்ஸ் அடிப்படையிலான முக அங்கீகாரத்துடன் வருகிறது மற்றும் ஒரு ஐஆர் பிளாஸ்டர் கொண்டுள்ளது.

ஓஎஸ் மற்றும் இணைப்பு ஆதரவு

ஓஎஸ் மற்றும் இணைப்பு ஆதரவு

ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3050எம்ஏஎச் (நீக்க முடியாத) பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், இரட்டை சிம், வைஃபை, டூயல்-பேண்ட், வைஃபை லைவ், ப்ளூடூத் 5.0, யூஎஸ்பி- சி மற்றும் என்எப்சி ஆகியவைகளை வழங்குகிறது. அளவீட்டில் 152.6 × 73.95 × 7.6 மிமீ மற்றும் 163 கிராம் எடையுள்ளதாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 3 new variant with 4GB RAM and 64GB storage launched. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X