சாம்சங் கேலக்ஸி நோட் 8 சாதனத்தை முந்துமா சியோமி மி நோட் 3.?

|

சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன் தான் சீன உற்பத்தியாளர்களிடமிருந்து அடுத்து வரவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போனாகும் என்றும் இக்கருவி இதர பட்ஜெட் கருவிகளை சந்தையில் வீழ்ச்சியை நோக்கி பயணிக்க வைக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கருவி கடந்த ஆண்டு சியோமி நோட் 3 அறிமுகமாகி விற்பனைக்கு வந்த அதே தொடக்க முறையை கொண்டிருக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி மி நோட் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலைப்பாட்டில் இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 836 எஸ்ஓசி கொண்டு அறிவிக்கப்படும் என்பது போல் தெரிகிறது.

ஸ்னாப்டிராகன் 836 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 836 எஸ்ஓசி

வெளியான இந்த தகவலானது சீன மைக்ரோ-பிளாக்கிங் தளமான விபோவில் வெளிவந்துள்ளது. சமீபத்தில், இதற்கு முன்னர் வெளியான தகவலும் இக்கருவி ஸ்னாப்டிராகன் 836 எஸ்ஓசி கொண்டிருக்குமென்று அறிவித்திருந்தது.

உறுதி

உறுதி

இதன் மூலம் சியோமி நிறுவனத்தின் முதன்மை சாதனங்களில் ஒரு கூடுதல் மேம்படுத்தலாக ஸ்னாப் டிராகன் 835 எஸ்ஓசி செயலிக்கு பதிலாக இந்த ஆண்டு அதன் தலைமை ஸ்மார்ட்போன்கள் 836 எஸ்ஓசி-ஐ பயன்படுத்தப்படுகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஆகஸ்ட் மாதம்

ஆகஸ்ட் மாதம்

முன்னதாக, இந்த செயலி ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி நோட் 8 சாதனத்தில் தொடங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று கூற்றுக்கள் இருந்தன. ஆனால் தற்போது இந்த செயலி கொண்டு வரும் முதல் கருவியாக மி நோட் 3 இருக்கும்.

எம்டிஇ 2

எம்டிஇ 2

சியோமி நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த புதிய மர்மமான சாதனம் எம்டிஇ 2 (MDE 2) என்ற குறியீட்டு பெயரின் கீழ் தற்போது உள்ளதாகவும் பிரபலமான சீன மைக்ரோ பிளாகிங் தளமான விபோ கூறுகிறது.

மி மிக்ஸ் 2 அல்லது மி நோட் 3

மி மிக்ஸ் 2 அல்லது மி நோட் 3

ஆனால், வெளியாகியுள்ள இந்த சிறிய தகவலில் இருந்து வேறு எந்த விவரங்களையும் பெற முடியவில்லை. எவ்வாறாயினும், ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் பெயரைக் கூற இது ஒரு ஆரம்பமாக இருக்கும். அதாவது இது எம்மாதிரியான ஒரு கருவியாக இருக்கும் என்று சில யூகங்களும் கிளம்பியுள்ளன. அதன்படி உள்ள சிறந்த யூகங்களை வைத்து பார்க்கும்போது கூறப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மி மிக்ஸ் 2 அல்லது மி நோட் 3 ஆக இருக்கலாம்.

முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்

முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்

அறிக்கைகள் சில ஒரு பெஸல்லெஸ் (உளிச்சாயும் குறைவான) டிஸ்ப்ளே போன்ற தொலைபேசியை சுட்டிக் காட்டுவதால் மிகவும் தெளிவான முறையில் இக்கருவி ஒரு மி மிக்ஸ் 2 ஆக இருக்க முடியும் என்பதை கணிக்க முடிகிறது. அது சாத்தியமாக இருப்பின், குறியீட்டு சாதனமான எம்டிஇ 2 முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.

18: 9 விகித டிஸ்பிளே

18: 9 விகித டிஸ்பிளே

மறுபக்கம் இந்த சாதனம் 18: 9 விகித டிஸ்பிளேவை ஆதரிக்கலாம் மற்றும் மியூஐ 9 உடன் வரலாம் என்று பரிந்துரைக்கப்படுவதால் இந்த விகிதத்தை கருத்தில் கொண்டு இக்கருவி மிக் மிக்ஸ் சாதனத்தின் அடுத்த பதிப்பாக இருக்கலாம் என்று நம்ப முடிகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 3 might use the Snapdragon 836 SoC. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X