5.7-இனச் டிஸ்பிளே வெளிவரும் சியோமி மி நோட் 2.!
இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் Weibo மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் தற்சமயம் சியோமி மி நோட் 2 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது, அதன்படி 5.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் இந்த சியோமி மி நோட் 2 ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி மி நோட் 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி/ 6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரிய ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இக்கருவி 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3டி டச் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்டோர-கோர் ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 823 சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும், மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு அசத்தலான செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் கைரேகை ஸ்கேனர் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
சியோமி மி நோட் 2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன்
அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
