இந்தியா: 108 மெகா பிக்சல் கேமரா கொண்ட 'சியோமி மி நோட் 10' விலை மற்றும் அறிமுகம் தேதி லீக்!

|

சியோமி நிறுவனம் அண்மையில் தனது சியோமி மி நோட் 10 ஸ்மார்ட்போனின் டீஸர் விபரங்களை வெளியிட்டு வருகிறது. தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி சியோமி நிறுவனத்தின் புதிய சியோமி மி நோட் 10 ஸ்மார்ட்போன் என்ன விலையில் எப்பொழுது இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று சில தகவல்கள் வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

சியோமி மி நோட் 10 ஸ்மார்ட்போன்

சியோமி மி நோட் 10 ஸ்மார்ட்போன்

சியோமி மி நோட் 10 ஸ்மார்ட்போன், 108 மெகா பிக்சல் கேமராவுடன் அறிமுகம் செய்யப்படும் என்று சியோமி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டது. சியோமி ரசிகர்கள் எப்போது இந்த சியோமி மி நோட் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்ன விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்தியச் சந்தையில் எப்பொழுது?

இந்தியச் சந்தையில் எப்பொழுது?

தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி, இந்த புதிய சியோமி மி நோட் 10 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் வரும் 2020 ஜனவரி மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சமூக வலைத்தளங்களில் சியோமி மி நோட் 10 பற்றிய விளம்பரங்கள் மற்றும் இந்த தகவல்கள் காணப்படுவதாக 91மொபைல்ஸ் தளம் தெரிவித்துள்ளது.

ஜியோ புதிய ஆல் இன் ஒன் திட்டம் அறிமுகம்! முன்பைவிட 300% அதிக நன்மைகளுடன்!ஜியோ புதிய ஆல் இன் ஒன் திட்டம் அறிமுகம்! முன்பைவிட 300% அதிக நன்மைகளுடன்!

எதிர்பார்க்கப்படும் விலை என்ன தெரியுமா?

எதிர்பார்க்கப்படும் விலை என்ன தெரியுமா?

அதேபோல் இன்னும் பல வலைத்தளங்களில் சியோமி மி நோட் 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெறும் ரூ.46,832 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் விலையுடன் தகவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாகப் பிப்ரவரி 5ம் தேதிக்குள் சியோமி மி நோட் 10 அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

சியோமியின் அதிக விலை ஸ்மார்ட்போன் இதுதானா?

சியோமியின் அதிக விலை ஸ்மார்ட்போன் இதுதானா?

அதேபோல் இன்னும் சிலர் இந்த வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ள விலை அமெரிக்கா டாலரின் இந்திய விலை என்றும், சியோமி மி நோட் 10 ஸ்மார்ட்போன் உண்மையில் இதை விடக் குறைந்த விளையான ரூ.40,000க்கு அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர். இருப்பினும் சியோமி நிறுவனத்திலிருந்து ரூ.40,000க்கு விற்பனையாகப் போகும் அதிக விலை ஸ்மார்ட்போன் இதுவாகத் தான் இருக்கும் என்கின்றனர்.

திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து 3திட்டங்களை வாபஸ் பெற்ற பிஎஸ்என்எல் நிறுவனம்.!திடீரென வேலிடிட்டி-ஐ குறைத்து 3திட்டங்களை வாபஸ் பெற்ற பிஎஸ்என்எல் நிறுவனம்.!

கசிந்துள்ள தகவலை நம்பலாம்

கசிந்துள்ள தகவலை நம்பலாம்

ஆகையால் தற்பொழுது வெளியாகியுள்ள தகவலைக் கேட்டு சியோமி பயனர்கள் கூடுதல் எதிர்பார்ப்பில் உள்ளனர். சியோமி மி நோட் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் நிறுவனத்தின் பக்கமிருந்து வெளியிடப்படவில்லை என்றாலும், கசிந்துள்ள தகவலை நம்பலாம் என்று தான் மொபைல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 10 with 108 Mega Pixel Camera Price and Launch Date Leaked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X