Home
Mobile

சியோமி நிறுவனத்தின் 108எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் டீசர் வெளியீடு.!

சில நாட்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மி சிசி9 ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளைஉருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்தியாவில் சியோமி மி சிசி9 ஸ்மார்ட்போன் ஆனது சியோமி மி நோட்10 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி நிறுவனத்தின் 108எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் டீசர் வெளியீடு

சியோமி மி நோட்10 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதி செய்யும் வகையில் சியோமி இந்தியா தலைவர் மனு ஜெயின் தனது ட்விட்டரில் டீசரை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.47-இன்ச்முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் 108எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் டீசர் வெளியீடு

சியோமி மி சிசி9 ப்ரோ ஆனது 2.2ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னப்டிராகன் 730ஜி சிப்செட் அடிப்படையாக கொண்டு வெளிந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் பின்புறம்
108எம்பி பிமைரி கேமரா-1/1.33″ f/1.69 1.6μm OIS
20எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா -117° field of view f/2.2
5எம்பி டெலிபோட்டோ - f/2.0 5x optical zoom, 10x hybrid zoom, 50x digital zoom OIS
12எம்பி - Samsung S5K2L7 dedicated போர்ட்ரைட் கேமரா-f/2.0 1.4μm
2எம்பி மேக்ரோ லென்ஸ் - 1.5cm minimum focus distance f/2.4 - என ஐந்து கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இவற்றுள் 32எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

சியோமி நிறுவனத்தின் 108எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனின் டீசர் வெளியீடு

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை,ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். சியோமி மி சிசி9 ப்ரோ ( மி நோட்10 ) ஸ்மார்ட்போனின் உண்மை விலை தெளிவாக தெரியவில்லை, இருந்தபோதிலும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 10 teased to launch in India soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X