Home
Mobile

108எம்பி கேமரா கொண்ட மிரட்டலான சியோமி ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்.!

சியோமி நிறுவனத்தின் 108எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ஆனது உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பற்றி அதிகம் எதிர்பார்க்கும் மக்களுக்கு ஒரு அருமையான செய்தி வெளிவந்துள்ளது.

நவம்பர் 6-ம் தேதி

நவம்பர் 6-ம் தேதி

அது என்னவென்றால் நாளை சியோமி நிறுவனத்தின் மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 6-ம் தேதி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனதுமி நோட் 10 எனும் பெயரின் கீழ் உலகளாவிய அறிமுகத்தை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிசி9 ப்ரோ - மி நோட் 10

சிசி9 ப்ரோ - மி நோட் 10

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் நாளை சீனாவில் மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது, நாளை மறுநாள் மி சிசி9 ப்ரோ ஆனது மி நோட் 10 எனும் பெயரின் கீழ் ஸ்பெயினின் மாட்ரிட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி எந்த அறிக்கையும் இல்லை, இருந்தபோதிலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில குறிப்புகளைப் பார்ப்போம்.

AMOLED டிஸ்பிளே

AMOLED டிஸ்பிளே

சியோமி மி சிசி9 ப்ரோ அல்லது மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவடிவமைப்பைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு அதிகளவு பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

108எம்பி அளவிலான பென்டா கேமரா

108எம்பி அளவிலான பென்டா கேமரா

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 5கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,அதில் ஒன்று 108எம்பி அளவிலான பென்டா கேமரா என்று அழைக்கப்படுகிறது,இது டிஜிட்டல் ஸூம் உடன் இணைந்து 50x வரையிலான ஸூமை உங்களுக்கு வழங்கும்.

 ஐந்து கேமராக்கள்

ஐந்து கேமராக்கள்

சியோமி மி சிசி9 ப்ரோ( மி நோட் 10) ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி( Penta-lens) + 12 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ்+ 50 எக்ஸ் டிஜிட்டல் ஸூம் + 10 எக்ஸ் ஆப்ஷனல் ஸூம், +சூப்பர் மேக்ரோ மோட் என ஐந்து கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்னப்டிராகன் 730ஜி

ஸ்னப்டிராகன் 730ஜி

இப்போது வந்த தகவல்களின் அடிப்படையில் சியோமி மி சிசி9 ப்ரோ( மி நோட் 10) ஆனது குவால்காம் ஸ்னப்டிராகன் 730ஜி
சிப்செட் அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைகொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

5260எம்ஏஎச் பேட்டரி

5260எம்ஏஎச் பேட்டரி

சியோமி மி சிசி9 ப்ரோ ( மி நோட் 10) ஸ்மார்ட்போனில் 5260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை,ஜபிஎஸ், என்எப்சி,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 10 Spain Launch Event Set on November 6: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X