Xiaomi Mi MIX Fold: வரவிருக்கும் அடுத்த சியோமி போல்டபில் ஸ்மார்ட்போன் இதுதான்!
சியோமி நிறுவனம் மடிக்கக்கூடிய போல்டபில் ஸ்மார்ட்போனுக்கான வடிவமைப்பு தொடர்பான பல காப்புரிமைகளை தாக்கல் செய்துள்ளது. அதில் சியோமியின் புதிய மாடல் காப்புரிமை, மோட்டோரோலா ரேஸ்ர் 2019 மாடல் போன்ற போல்டபில் மாடல் ஸ்மார்ட்போன் சாதனத்தைக் போலவே உள்ளது. இந்த புதிய போல்டபில் போனின் விபரங்கள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

சி.என்.ஐ.பி.ஏ-வில் சியோமி போல்டபில் போன் டிசைன்
5ஜி தொழில்நுட்பத்துடன், பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் கூடிய, இருபுறமும் வெளிப்புறமாக மடிக்கக்கூடிய ஒரு டிஸ்பிளேயுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் டிசைனை காப்புரிமைக்கான மாதிரி தகவல் காண்பித்துள்ளது. இன்னும் இந்த போன் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, சி.என்.ஐ.பி.ஏ.வின் (CNIPA) இணையதளத்தில் சியோமி போல்டபில் போன் டிசைன் காணப்பட்டுள்ளது.

டிசைன் பேடண்ட் என்ன சொல்கிறது?
இந்த தளத்தில் காணப்பட்ட டிசைன், சியோமியின் Mi Fold or Mi MIX Fold போன்று உள்ளது என்றும், இதன் மெக்கானிசம் Huawei Mate X போன்று உள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமி மி மிக்ஸ் போல்டபில் ஸ்மார்ட்போனின் படங்களிலிருந்து, மடிக்கக்கூடிய டிஸ்பிளேயுடன் ஒரு பெரிய ஹின்ஜ் உள்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கர்வ்டு டிஸ்பிளேயுடன் போல்டபில் ஸ்கிரீன்
அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் கர்வ்டு டிஸ்பிளேயுடன், வெளிப்புறமாக மாடக்கூடிய விதத்திலும், பின்புற டிசைன் ஹுவாய் மேட் எக்ஸைப் போலவே ஃபிளாட்டாக உள்ளது. மி மிக்ஸ் போல்டபில் போன் டேப்லெட் அளவிலான டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது, டூயல் கேமராக்களுடன் செல்பி மற்றும் வீடியோ சேவைகளுடன் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

மல்டி ஆக்டிவ் விண்டோஸ்
சியோமி நிறுவனத்தின் தனிப்பயன் ஸ்கின் MIUI இயங்குதளத்தில் புதிய மறுபாடுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம், இது மடிக்கக்கூடிய போல்டபில் டிஸ்பிளே வடிவமைப்பை ஆதரிக்க தனிப்பயனாக்கப்படும். இந்த ஸ்மார்ட்போன் மல்டி ஆக்டிவ் விண்டோஸ் மற்றும் பயன்பாட்டுச் செயலிகளை ஆதரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி மிக்ஸ் போல்டபில் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
சியோமி மி மிக்ஸ் போல்டபில் ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் போனாக, ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் களமிறக்கப்படும். Xiaomi Mi MIX போல்டபில் ஸ்மார்ட்போன் ஒரு முதன்மை சாதனமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

சக்திவாய்ந்த பிராசஸருடன் வரும்
ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் தற்போதுள்ள மிக சக்திவாய்ந்த சிப்செட் பிராசஸராகும். இருப்பினும் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமானவை அல்ல என்பதனால் நாம் காத்திருக்க வேண்டும். நிச்சயம் இது கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டMi MIX ஆல்பா போனிற்கு மாற்றாக பெரிய மேம்படுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








