6.39-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறுவனம் இந்த மாதம் இறுதியில் தனது புதிய சியோமி மி மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் பல்வேறு முக்கிய சிறப்பம்சங்களுடன் வெளியாகும என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சியோமி மி மிக்ஸ் 4 சாதனம் 4ஜி மற்றும் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 11சிரீஸ் சாதனங்களை விட சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 108எம்பி பிரைமரி சென்சார் ஆதரவு கொண்டு வெளிவரும் எனத் தகவல் கசிந்துள்ளது. மேலும் சியோமி மி மிக்ஸ் 4 சாதனம் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சியோமி மி மிக்ஸ் 4 சாதனம் 6ஜிபி/8ஜிபி ரேம் வசதி மற்றும் 128/256ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த சியோமி மி மிக்ஸ் 4 சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்குமுன்பு வந்த சியோமி மி மிக்ஸ் 3 சாதனம் 6.39-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்தது, மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845எஸ்ஒசி சிப்செட் வசித, 6ஜி ரேம், 128ஜிபி மெமரி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்தது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.1 இயங்குளதம் கொண்டுள்ளது சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன்.பின்பு இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ,34,800-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications