10ஜிபி ரேம் மற்றும் 24எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 3.!
சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, மேலும் வரும் அக்டோபல் 25-ம் தேதி சியோமி மி மிக்ஸ் 3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 10ஜிபி ரேம் மற்றும் 24எம்பி செல்பீ கேமரா போன்ற பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 5G connectivity ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
இக்கருவி 6.4-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற
திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்டபோனை பயன்படுத்த முடியும் குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், மற்றும்
பேஸ் அன்லாக் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845:
சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி
பின்பு இதனுடன் 10ஜிபி ரேம் இடம்பெறும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி+13எம்பி டெலிபோட்டோ லென்ல் அமைப்புடன் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 24எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக 3D facial recognition அமைப்பு மற்றும ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் அடக்கம்.

தொடரின் பிரீமியம் சாதனமாக திகழும்
கசிந்த படத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை, இருப்பினும் சில சுவாரசியமான அம்சங்களை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த புகைப்படம் உண்மையானால், கூறப்படும் மி மிக்ஸ் 3 ஆனது மி மிக்ஸ் தொடரின் பிரீமியம் சாதனமாக திகழும்


Click it and Unblock the Notifications