தெறிக்க விட வருகின்றது எம்ஐ மிக்ஸ் 3 ஸ்மார்ட் போன்.!
சியோமி எம்ஐ நிறுவனம் இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து வருகின்றது. இளைஞர்களை பெரிதும் கவரும் ஸ்மார்ட் போன்களையும், புது விடமாடல்களையும் சந்தைக்கு அறிமுகம் செய்வதிலும், விற்பனையில
சியோமி எம்ஐ நிறுவனம் இந்தியாவில் பல்வேறு ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து வருகின்றது. இளைஞர்களை பெரிதும் கவரும் ஸ்மார்ட் போன்களையும், புது விடமாடல்களையும் சந்தைக்கு அறிமுகம் செய்வதிலும், விற்பனையிலும் முன்னணியாக திகழ்கின்றது.

இந்நிலையில் இந்தியாவில் விரைவில் சியோமி எம்ஐ மிக்ஸ் 3 என்ற ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்படுகின்றது. இதில் ஏராளமான சிறப்பு அம்சங்களும் இருக்கின்றது. சீனாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம்ஐ மிக்ஸ் 3:
இந்த எம்ஐ மிக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் புல் ஹெச்டி பளிஸ் அமோல்டு டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகப்பட்சம் 10 ஜிபி, ரேம், கூகுள் ஏஆர் கோர் வசதி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம். ஏஐ வாய்ஸ் அசிஸ்ட்ன்ட், பிரத்யேக ஏஐ பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

பிரத்யேக ஸ்லைடர் டிசைன்:
பிரத்யேக ஸ்லைடர் டிசைன் மற்றும் நியோடிமியம் நிரந்தர காந்தகங்கள் வழங்கப்பட்டிருப்பதால், ஸ்லைட்டர் மிகச்சிறப்பாக இயங்கும். ஸ்லைட்டர் திறந்த நிலையில் அழைப்புகள் ஏற்கவோ, செல்பி எடுப்பது, ஷார்ட்கட் இயக்குவது போன்றவைற்றை மேற்கொள்ளலாம். ஸ்லைடர் ஆப்ஷனிற்கு என பிரத்யேக ஆடியோக்களை செட் செய்யலாம்.

கேமரா, சென்சார்:
புகைப்படங்கள் எடுக்க 12எம்பி பிரைமரி, கேமரா, சோனி ஐஎம்எஸ் 363, 1.4µm பிக்சல், ஓஎஸ், டூயல் பிக்சல் ஆட்டோ, போக்கஸ், 2வது 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ், சாம்சங் எஸ்5கே3எம்3+சென்சார், 24 எம்பி செல்பி கேமரா, சோனி ஐஎம்எக்ஸ் 576 சென்சார், 2 எம்பி டிஓஎப் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ரேம் மற்றும் மெமரி:
இந்த போன் 6.39 இன்ச் டிஸ்பிளே உடையது. மேலும் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்படிராகன் 845 பிராசஸர் அட்ரினோ 630 ஆகியவை இருகின்றன. மேலும், 6 ஜிபி ரேம் 128 மெமரி, 8 ஜிபி ரேம் 128 ஜிபி மற்றும் 256 மெமரி ஆகியவை இருக்கின்றன.

ஆன்ட்ராய்ட ஓரியோ:
இதில் ஆன்ட்ராய்டு ஓரியோ 8.1 ம்ற்றும் எம்ஐயூஐ 10 டூயல் சிம் ஸ்லாட், 12 எம்பி, 26 எம்பி வைடு லென்ஸ், கைரேகை சென்சார், டூயல் 4 ஜி வோல்ட், 3200 எம்ஏஹெச் பேட்டரி, குவிக் சார்ஜ் 4.0 பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.

கிடைக்கும் நிறங்கள்:
இதில், ஒனிக்ஸ் பிளாக், ஜேட் கிரீன், சபைர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கின்றது 6ஜபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை இந்தியாவில் ரூ.34,800ம், 8ஜிபி ரேம் 256 ஜிபி ரூ.42,185க்கும் விற்பனை செய்யப்படும். 10 ஜிபி ரேம் 256 மெமரி ரூ.52,770க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.


Click it and Unblock the Notifications