Home
Mobile

5 ஜியில் ஸ்மார்ட் போன் வந்தாச்சு.! அதிரடியில் இறங்கிய சியோமி.!

சியோமி நிறுவனம் இந்தியாவில் முன்னணி விற்பனையில் இருகின்றது. இந்த நிறுவனத்தின் செல்போன்கள் பயன்படுத்தாத மக்கள் இல்லை என்றும் கூறலாம். அந்த அளவுக்கு இந்த நிறுவனத்தின் செல்போன்கள் மக்களிடம் பிரபமடைந்

சியோமி நிறுவனம் இந்தியாவில் முன்னணி விற்பனையில் இருகின்றது. இந்த நிறுவனத்தின் செல்போன்கள் பயன்படுத்தாத மக்கள் இல்லை என்றும் கூறலாம்.

5 ஜியில் ஸ்மார்ட் போன் வந்தாச்சு.! அதிரடியில் இறங்கிய சியோமி.!

அந்த அளவுக்கு இந்த நிறுவனத்தின் செல்போன்கள் மக்களிடம் பிரபமடைந்துள்ளது. தற்போது 4ஜி வோல்ட்டில் சேவை வழங்கும் சியோமி நிறுவனம் இனி அடுத்த தலைமுறைக்கான 5 ஜியில் அடி எடுத்து வைக்கின்றது.

சியோமியின் 5ஜி:

சியோமியின் 5ஜி:

சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. Mi மிக்ஸ் 3 அறிமுகமானதும், இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக அந்நிறுவன தலைவர் லின் பின் தெரிவித்தார்.

எம்ஐ மிக்ஸ் 3:

எம்ஐ மிக்ஸ் 3:

லின் பின் தனது வெய்போ அக்கவுன்ட்டில் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு பை இயங்குதளத்தின் ஸ்டாக் வெர்ஷனை கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் வலது புற மேல்பக்கம் 5ஜி நெட்வொர்க் காணப்படுகிறது.

அதிர வைக்கின்றது 5 ஜி:

அதிர வைக்கின்றது 5 ஜி:

அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் அறிமுகமாகும் போது ஆன்ட்ராய்டு 9 பை மற்றும் சமீபத்திய MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கும். புதிய 5ஜி வேரியன்ட் புதிய சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்குமா அல்லது, பழைய சிறப்பம்சங்களுடன் வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

பிரமிக்க வைக்கும் ஸ்னாப்டிராகன்:

பிரமிக்க வைக்கும் ஸ்னாப்டிராகன்:

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனையும், இந்த ஆண்டு மார்ச் மாதம் மேம்படுத்தப்பட்ட Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் அதிக சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்பட்டது.

மெமரியும் வியக்க வைக்கின்றது:

மெமரியும் வியக்க வைக்கின்றது:

அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் Mi மிக்ஸ் 3 போன்ற வடிவமைப்புடன், புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம்.

Best Mobiles in India

English summary
சியோமி நிறுவனம் இந்தியாவில் முன்னணி விற்பனையில் இருகின்றது. இந்த நிறுவனத்தின் செல்போன்கள் பயன்படுத்தாத மக்கள் இல்லை என்றும் கூறலாம். அந்த அளவுக்கு இந்த நிறுவனத்தின் செல்போன்கள் மக்களிடம் பிரபமடைந்துள்ளது. தற்போது 4ஜி வோல்ட்டில் சேவை வழங்கும் சியோமி நிறுவனம் இனி அடுத்த தலைமுறைக்கான 5 ஜியில் அடி எடுத்து வைக்கின்றது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X