Home
Mobile

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்.!

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள செல்பீ கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ், கைரேகை சென்சார், ஹோம் பட்டன் போன்ற விருப்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

சியோமி நிறுவனத்தின் அட்டகாசமான மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்

மேலும் வெளிவந்த தகவலின் அடிப்படையில் சியோமி மி மிக்ஸ் 2எஸ் சாதனம் மொபைல் உலக காங்கிரஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படுத்த வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

பெசல்-லெஸ் வடிவமைப்பு மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த அட்டகாசமான மி மிக்ஸ் 2எஸ் சாதனம் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்

சாம்சங், சோனி போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியை பயன்படுத்தும் உரிமத்தை
ஏற்கனவே பெற்றிருக்கும் நிலையில், தற்சமயம் சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டு மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடிவுசெய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள செல்பீ கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ், கைரேகை சென்சார், ஹோம் பட்டன் போன்ற விருப்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்

இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil

சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.41,000-வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi MIX 2S With Snapdragon 845 to Launch at MWC 2018 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X