மார்ச் 27: ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்.!
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
சியோமி நிறுவனம் அதன் மி மிக்ஸ் 2எஸ் சாதனத்தை வரும் மார்ச் 27-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி பல்வேறு அம்சங்களை கொண்டுள்து இந்த ஸ்மார்ட்போன் மாடல். சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்த நிலையில், இப்போது இதன் வெளியீட்டு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சியோமியின் மூத்த துணைத் தலைவரான வாங் ஜியாங் மார்ச் 27 ம் தேதி இந்த மி மிக்ஸ் 2எஸ் சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு டூயல் ரியர் கேமரா வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பெஸல்-லெஸ்:
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆனது 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் இந்த சாதனத்தின் டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம்:
இக்கருவி 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவால்காம்:
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, கைரேகை சென்சார், டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


3500எம்ஏஎச்:
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications