8ஜிபி ரேம்+128ஜிபி; செராமிக் பாடி; மிரட்டும் மி மிக்ஸ் 2எஸ்; நாளை முதல்.!

உடன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட ஒரு மாறுபாடும் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்படும்.

|

ஒருவழியாக, நாளை (மார்ச் 27) அறிமுகமாகவுள்ள சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வமான அம்சங்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் லீக்ஸ் அல்ல, சியோமி நிறுவனத்தின் சிஇஓ வழியாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதாவது கிட்டத்தட்ட அதிகாரபூர்வமான அம்சங்கள் என்றே வைத்துக்கொள்ளலாம்.

சியோமி நிறுவனத்தின் சிஇஓ ஆன லேய் ஜூன் வெளியிட்டுள்ள தகவலின்படி, சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில், நான்கு முனைகளிலும் வளைந்த பீங்கான் உடல் வடிவமைப்பு இடம்பெறும். உடன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட ஒரு மாறுபாடும் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்படும். மார்ச் 27-ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வருகை சார்ந்த வார்த்தைகள் ஏதுமில்லை.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு.!

இரட்டை பின்புற கேமரா அமைப்பு.!

சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில், ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு, செங்குத்தான வடிவமைப்பில் இடம்பெறும் இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் சில செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா ஆகிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் எக்ஸ் போன்ற டிஸ்பிளே.!

ஐபோன் எக்ஸ் போன்ற டிஸ்பிளே.!

முன்னர் வெளியானதொரு லீக்ஸ் வீடியோவில், சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆனது ஒரு வெள்ளை நிற மாறுபாட்டில் மற்றும் பீங்கான் வடிவமைப்பில் காணப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே வீடியோவில் ஒரு செங்குத்து பின்புற கேமரா அமைப்பு மற்றும் பெஸல்லெஸ் (ஐபோன் எக்ஸ் போன்ற) டிஸ்பிளேவும் வெளிப்படுத்தப்பட்டது.

டிஸ்பிளேயுடன் உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சார் இடம்பெறாது.!

டிஸ்பிளேயுடன் உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சார் இடம்பெறாது.!

இக்கருவி அதன் பின்புறத்தில் கைரேகை சென்சார் ஒன்றையும் கொண்டுள்ளது. இதன் அர்த்தம் - விவோ எக்ஸ்21 மற்றும் விவோ எக்ஸ்20 பிளஸ் யூடி போன்ற ஸ்மார்ட்போன்களில் காணப்பட்டதைப் போன்ற டிஸ்பிளேயுடன் உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சார் இடம்பெறாது என்பதாகும்.

How to Find a domain easily for your business (TAMIL)
மேம்படுத்தப்பட்ட பேஸ் அன்லாக் அம்சம்.!

மேம்படுத்தப்பட்ட பேஸ் அன்லாக் அம்சம்.!

இதுவொரு குறையாக இருக்காது ஏனெனில், சமீபத்தில் சியோமியால் வெளியிடப்பட்ட இரண்டு டீஸர்களிலும், மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் கேமராவில் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் அடிப்படையிலான ஸ்க்ரீன் ரிககனைசேஷனும், மேம்படுத்தப்பட்ட பேஸ் அன்லாக் அம்சமும் இடமபெற்றுள்ளது. நாளை வெளியாகும் மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அம்சங்களை பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi MIX 2S to Sport Ceramic Body, 8GB RAM, 128GB Storage, Says CEO. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X