மிரட்டலான மி மிக்ஸ் 2எஸ்; இனி ரூ.1,01,500/-க்கு ஐபோன் X வாங்குவது வேஸ்ட்.!

வெளியான புகைப்படத்தில் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

|

சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலைப்பாட்டில், கூறப்படும் கருவியின் மிரட்டலான அம்சங்களை வெளிப்படுத்தும் லீக்ஸ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மிரட்டும் மி மிக்ஸ் 2எஸ்; இனி ரூ.101500-க்கு ஐபோன் X வாங்குவது வேஸ்ட்!

அட அம்சங்களை ஓரங்கட்டுங்கள்; வெளியான புகைப்படத்தில் காட்சிப்படும் சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பே மிரட்டலாய் உள்ளது. இன்னும் எளிமையான வார்த்தைகளில் - ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய முதன்மை சாதனமான ஐபோன் எக்ஸ் போன்றே உள்ளது.

ஆக இந்த புகைப்படத்தை கண்டு சியோமி ரசிகர்கள் 'ஷாக்' ஆனார்களோ இல்லையோ, ஆப்பிள் நிறுவனம் இந்நேரம் நகத்தோடு சேர்த்து விரலையும் கடித்துக் கொண்டிருக்கும்.!

வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு

வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு

வெளியான புகைப்படத்தில் வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் வெளியான தகவல்களும் இதையேதான் கூறின என்பதும், வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு அம்சமானது ஆப்பிள் ஐபோன் எக்ஸ்-ன் ஒரு பிராதன அம்சம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இரட்டை பின்புற கேமரா

இரட்டை பின்புற கேமரா

மேலும் வெளியான லீக்ஸ் புகைப்படங்களில், செங்குத்தாக வைக்கப்பட்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பை காணமுடிகிறது. இதுவும் ஐபோன் எக்ஸ்-ல் இடம்பெற்றுள்ள கேமரா அமைப்பை போலவே தான் உள்ளது. வருகிற மார்ச் 27-ல் சீனாவில் நடக்கும் ஒரு நிகழ்வில் மி மிக்ஸ் 2எஸ் வெளியாகிறது.

மெல்லிய-பெஸல் வடிவமைப்பு

மெல்லிய-பெஸல் வடிவமைப்பு

இதர அம்சங்களை பொறுத்தமட்டில் மி மிக்ஸ் 2எஸ் ஆனது அதன் முன்னோடிகளின் மெல்லிய-பெஸல் வடிவமைப்பை தழுவியுள்ளது. அதாவது ஸ்மார்ட்போனின் மேல் மற்றும் பக்கங்களில் குறைவான பெஸல்களே உள்ளன. இதன் விளைவாக மி மிக்ஸ் 2எஸ் ஆனது மிகவும் மெலிதான ஸ்மார்ட்போனாக இருக்கும்.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

செல்பீ கேமரா அதாவது முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில், முன்பக்கத்தின் கீழ் பகுதியில் கேமரா சென்சாருக்கான அறை ஒதுக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஆம்பியண்ட் லைட் மற்றும் பராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவைகளுடன் சேர்த்து செல்பீ கேமரா இணைக்கபப்டும்.

வயர்லெஸ் பவர் கூட்டமைப்பு

வயர்லெஸ் பவர் கூட்டமைப்பு

கருவியின் பின்புறமானது பளபளப்பாக இருக்கிறது. அது ஒரு கண்ணாடி அமைப்பாக இருக்கலாம்; இதன் அர்த்தம், மி மிக்ஸ் 2எஸ் ஆனது வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு கொண்டிருக்கும். வயர்லெஸ் பவர் கூட்டமைப்பு வெளியிட்ட பட்டியலில் (க்யூஐ தரநிலை அடிப்படையிலான வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பம்) சியோமி இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

கேமரா அமைப்பின் அளவீடுகள்

கேமரா அமைப்பின் அளவீடுகள்

செங்குத்தாக அமைக்கப்பெற்றுள்ள இரட்டை பின்புற கேமரா அமைப்பின் அளவீடுகள் பற்றிய வார்த்தைகள் இல்லை. ஏற்கனவே ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது ஐபோன் எக்ஸ் மூலம் மிகவும் ஈர்க்கப்பட்டது போன்றே தெரிகிறது. ஆக அதில் இடம்பெற்ற அளவீடுகளையே மி மிக்ஸ் 2எஸ் இரட்டை கேமரா அமைப்பும் கொண்டிருக்கலாம்.

6.01 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே

6.01 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே

இதற்கு முன்னர் வெளியான சில வதந்திகளின்படி, மி மிக்ஸ் 2எஸ் ஆனது ஒரு 6.01 அங்குல முழு எச்டி+ (1080x2160 பிக்சல்கள்) டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 845எஸ்ஓசி, 8 ஜிபி ரேம் மற்றும் 4400எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

எல்லாவற்றிக்கும் மேலாக, சமீபத்தில் வெளியான அனைத்து வகையான நோக்கியா ஸ்மார்ட்போன்களையும் துவம்சம் செய்யும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரியும், மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெறவுள்ளது. மேலும் பல வகையான ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi MIX 2S Leaked Photos Show iPhone X-Like Vertical Dual Rear Camera. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X