"வேற லெவல்" ஸ்மார்ட்போனாக களமிறங்கும் சியோமி மி மிகஸ் 2எஸ்.!
மி மிகஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ள சியோமி மி மிகஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் தற்சமயம் ஆன்லைனில் கசிந்துள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். வரும் மார்ச் 27-ம் தேதி இந்ந மி மிகஸ் 2எஸ் சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கருவி பெசல-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தான் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி மி மிகஸ் 2எஸ்
சியோமி மி மிகஸ் 2எஸ் சாதனம் 5.99-இன்ச் முழு எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080
பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845 :
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த மி மிகஸ் 2எஸ் ஸ்மார்ட்போன், மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த சாதனம்.

8ஜிபி ரேம் :
மி மிகஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வயர்லெஸ் சார்ஜ்:
வயர்லெஸ் சார்ஜ் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் போன்ற பல்வேறு வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பேட்டரி:
மி மிகஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


டூயல் கேமரா:
ஐபோன் எக்ஸ் சாதனத்தில் இடம்பெற்றுள்ள செங்குத்தான டூயல் கேமரா வசதி, இந்த மி மிகஸ் 2எஸ் சாதனத்திலும் இடம்பெற்றுள்ளது, மேலும் 4கே வீடியோ பதிவு மற்றும் எல்இடி பிளாஷ் போன்ற ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.


Click it and Unblock the Notifications