ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்.!
இக்கருவி 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி மி மிக்ஸ் 2எஸ் சாதனம் கண்டிப்பாக ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று சியோமி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பெசல்-லெஸ் டிஸ்பிளே மற்றும் 90-சதவீதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ வசதியைக் கொண்டுள்ளது.

சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மாடல் வரும் மார்ச் 27-ம் தேதி அறிமுகப்படுத்த வாய்புகள் உள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் புதிய டீஸர் சமீபத்தில் வெளிவந்தது, மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி மி மிக்ஸ் 2எஸ் ::
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆனது 6.01-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

8ஜிபி ரேம்:
இக்கருவி 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவால்காம்:
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

12எம்பி ரியர் கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, கைரேகை சென்சார், டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


4400எம்ஏஎச்:
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 4400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








