மிகவும் எதிர்பார்த்த சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆர்ட் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி சீனாவில் புதிய சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆர்ட் ஸ்பெஷல் எடிஷன் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அந்நிறுவனம் மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு சற்று வித்தியசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆர்ட் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் பங்களிப்பை உயர்த்தி லேசர் வேலைப்பாடு கொண்ட கருப்பு நிறத்தில் வெளிவந்துள்ளது. மேலும் வயர்லெஸ் சார்ஜருடன் தனிப்பயனாக்கப்பட்ட பாக்ஸ் தொகுப்புடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின்பு அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கியுள்ளது.

சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆர்ட் ஸ்பெஷல் எடிஷன் :
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆர்ட் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.0-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
ஆர்ட் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. ஆப் மற்றும் வீடியோ கால் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இந்த சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆர்ட் ஸ்பெஷல் எடிஷன ஸ்மார்ட்போனில் 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல்-சிம் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது.


3400எம்ஏஎச்:
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆர்ட் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும்
விரைவில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications