Home
Mobile

மிரட்டலான மி மிக்ஸ் 2 : சாம்சங் கேலக்ஸி எஸ்8 & எல்ஜி ஜி 6-க்கு ஆப்பு.!

சியோமி மி மிக்ஸ் 2 : என்னென்ன அம்சங்கள், இந்திய வெளியீடு & விலை நிர்ணயம் என்ன.?

By Muthuraj

சியோமி நிறுவனத்தின் புதிய பெஸல்லெஸ் ஸ்மார்ட்போன் ஆன மி மிக்ஸ் 2, சீனாவில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மி மிக்ஸ் 2 ஆனது மி மிக்ஸ் ஸ்மார்ட்போனின் வாரிசு ஆகும். ஒரு காலத்தில் கான்செப்ட்களில் மட்டுமே காணப்பட்ட பெஸல்லெஸ் வடிவமைப்பெல்லாம் இப்போது மிகவும் சகஜமாகிவிட்டது.

மிரட்டலான மி மிக்ஸ் 2 : சாம்சங் கேலக்ஸி எஸ்8 & எல்ஜி ஜி 6-க்கு ஆப்பு.!

சாம்சங் கேலக்ஸி எஸ்8 தொடர், எல்ஜி ஜி 6 உட்பட பல தொலைபேசிகள் பெஸல்லெஸ் வடிவமைப்பு கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்நிலைப்பாட்டில், சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் புதிதாக இருப்பது என்ன.? சாதனத்தின் இதர அம்சங்கள் என்னென்ன.? இந்தியாவில் இதன் விலை நிர்ணயம் என்னவாக இருக்கும்.?

சியோமி மி மிக்ஸ் 2 அம்சங்கள்

சியோமி மி மிக்ஸ் 2 அம்சங்கள்

சாதனத்தின் அடிப்படையான குறிப்புகளை பொறுத்தமட்டில், இக்கருவி க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி, ஆக்டா-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 6ஜிபி மற்றும் 8ஜிபி என இரண்டு ரேம் விருப்பங்களில் வரும் இக்கருவியின் 6 ஜிபி ரேம் மாறுபாடானது மொத்தம் மூன்று சேமிப்பு விருப்பங்களில் - 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி - வருகிறது.

பேட்டரி

பேட்டரி

மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பு பதிப்பானது ஒரு பீங்கான் யூனிபாடி வடிவமைப்பு கொண்டு 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 3400எம்ஏஎச் ஏன பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இக்கருவி அதன் அசல் ஸ்மார்ட்போனின் 4400 எம்ஏஎச் என்ற பேட்டரியுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியதாக உள்ளது.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ள கைரேகை சென்சார் கொண்டுள்ள இக்கருவி மியூஐ 9 உடனான ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.1.2 உடன் இயங்குகிறது.

கேமரா

கேமரா

கேமராவை பொறுத்தமட்டில், மி மிக்ஸ் 2 ஆனது எதிர்பார்த்தபடி ஒரு இரட்டை பின்புற கேமரா அம்சம் கொண்டு வரவில்லை என்பது ஏமாற்றம். ஒரு சோனி ஐஎம்எக்ஸ்386 சென்சார், 4-ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் கொண்ட ஒரு 12எம்பி பின்பக்க கேமராவும், மிக்ஸ் மிக்ஸ் ஸ்மார்ட்போனில் இருந்தது போலவே ஒரு 5எம்பி செல்பீ கேமராவும் கொண்டுள்து.

டிஸ்பிளே

டிஸ்பிளே

மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் ஆனது வெறும் பெஸல்லெஸ் வடிவமைப்பை மட்டுமே கொண்டிருக்கவில்லை. சியோமி மி மிக்ஸ் 2 அதன் 2 அசல் தொலைபேசியை விட 11.9 சதவீதம் சிறியதாக உள்ளது மற்றும் 18: 9 என்ற விகிதமுடன் ஒரு 5.99 அங்குல முழு டிஸ்பிளே கொண்டுள்ளது. முந்தைய மி மிக்ஸ் ஒரு பெரிய 6.4 அங்குல டிஸ்பிளே கொண்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

டிசைன்

டிசைன்

அசல் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட 'பைஸோஎலெக்ட்ரிக் ஸ்பீக்கர் சொல்யூஷன்' தவிர்க்கப்பட்டு மி மிக்ஸ் 2 சாதனத்தில் ஹிட்டன் ஸ்பீக்கர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய கருவிகளில் காணப்பட்ட அல்டரா சோனிக் ப்ராக்ஸிமிட்டி சென்சார் அம்சத்தை கொண்டுள்ள இக்கருவி கருப்பு மற்றும் வெள்ளை என்ற இரண்டு வழக்கமான வண்ண மாதிரிகளில் அறிமுகமானாலும், இதன் ரெகுலர் வெர்ஷன் ஆனது பிளாக் வண்ண விருப்பத்தில் மட்டுமே தொடங்கப்படும்.

இந்திய அறிமுகம்

இந்திய அறிமுகம்

தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி மி மிக்ஸ் 2 ஆனது வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அங்கு விற்பனைக்கு வருகிறது. இந்திய அறிமுகத்தை பற்றிய தெளிவான வார்த்தைகள் இல்லை என்கிற போதிலும் இந்த ஆண்டிற்க்குள் இந்திய சந்தைகளை மி மிக்ஸ் 2 சாதனம் எட்டலாம்.

இந்திய விலை நிர்ணயம்

இந்திய விலை நிர்ணயம்

இக்கருவியின் 6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பானது சுமார் ரூ.32,000/- என்ற நிர்ணயத்தையும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாறுபாடு சுமார் ரூ.35,000/- என்ற விலை நிர்ணயத்தையும் பெறலாம். அதே அளவிலான ரேம் மற்றும் உள்ளடக்க சேமிப்புத்திறன் (6ஜிபி+128ஜிபி) கொண்ட ப்ளஸ் மாறுபாடானது சுமார் ரூ.39,000/- என்ற விலைக்கும், மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பு மாறுபாடான 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு சாதனம், சுமார் ரூ.45,000/- என்ற புள்ளியை எட்டலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix 2 launched: Price, full specifications, and everything else to know Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X