அக்டோபர் 10 : இந்தியாவில் அட்டகாசமான சியோமி மி மிக்ஸ் 2 அறிமுகம்.!
இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் இப்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் அக்டோபர் 10ஆம் தேதி சியோமி மி மிக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.46,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 835 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சியோமி ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

5.99-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் தீர்மானம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
சியோமி மி மிக்ஸ் 2 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட்
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல்எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை , ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3400எம்ஏஎச்:
சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








