Home
Mobile

மெல்லிய பெஸல்களுடன் ஹோம் பொத்தான் இன்றி சியோமி மி மிக்ஸ் 2.!

வெளியான புகைப்படத்தில் சாதனம் அதன் முன்பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

By Muthuraj

சியோமி மி மிக்ஸ் 2 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவில் நிகழப்போகிறது என்றாலும் கூட, அக்கருவி சார்ந்த லீக்ஸ் செய்திகள் ஆன்லைனை வட்டமடிப்பதை நிறுத்துவதாய் இல்லை. அப்படியாக, சமீபத்தில் வெளியான லீக்ஸ் தகவலின் கீழ் வெளியாகும் சினி மி மிக்ஸ் 2 ஆனது பெஸல்லெஸ் டிஸ்பிளே கொண்டிருக்கும் என்ற தகவலை வழங்கியுள்ளது.

மெல்லிய பெஸல்களுடன் ஹோம் பொத்தான் இன்றி சியோமி மி மிக்ஸ் 2.!

உடன் சியோமி நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் இக்கருவி சார்ந்த புதிய லீக்ஸ் புகைப்படம் ஒன்றும் அதன் பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பை காட்சிப்படுத்துகிறது. வெளியான புகைப்படத்தில் சாதனம் அதன் முன்பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

டிஸ்பிளே-டூ-பாடி

டிஸ்பிளே-டூ-பாடி

ஸ்லாஷ் லீக்ஸ் கருத்துப்படி, மி மிக்ஸ் 2 சாதனத்தின் டிஸ்பிளே-டூ-பாடி விகிதத்தில் வெளிப்படையான அதிகரிப்பு உள்ளது. பெஸல்கள் மிகவும் மெலிதாக இருக்கின்றன, டிஸ்பிளே எல்லைகள் மிக ஆழமாகவும், எல்லைகளைத் தொடுவதற்கு மிகுதியாகவும் இருக்கின்றன.

இரண்டாம் தலைமுறை பெஸல்லெஸ் வடிவமைப்பு

இரண்டாம் தலைமுறை பெஸல்லெஸ் வடிவமைப்பு

மி மிக்ஸ் சாதனத்தோடு ஒப்பிடுகையில் மி மிக்ஸ் 2 சாதனத்தின் டிஸ்பிளேவிற்கு கீழே உள்ள பகுதி குறிப்பிடத்தக்க அளவு மெலிதாக உள்ளது. இரண்டாம் தலைமுறை பெஸல்லெஸ் வடிவமைப்பு பற்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜூன் கூறிய கருத்தை இந்த லீக்ஸ் புகைப்படம் உறுதி செய்துள்ளது.

உருண்டையான காட்சி மூலை

உருண்டையான காட்சி மூலை

நாம் இதுவரை அறிந்தவற்றிலிருந்து, சியோமி மி மிக்ஸ் 2 ஆனது இந்த ஆண்டு வெளியான பல தலைமை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலானவற்றைப் பார்த்துள்ளதைப் போன்ற உருண்டையான காட்சி மூலைகளோடு வெளி வரும்.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

மிக முக்கியமாக, முன்பக்கம் முகப்பு பொத்தானோ அல்லது கைரேகை ஸ்கேனரோ இதுவரை காட்சிப்படுத்தப்படவில்லை. ஆக இதன் கைரேகை ஸ்கேனர் மி மிக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது போல் ஸ்மார்ட்போனின் பின்பக்கம் நகர்த்தப்படலாம்.

3டி பேஸ் ரிக்கனைஷேஷன் தொழில்நுட்பம்

3டி பேஸ் ரிக்கனைஷேஷன் தொழில்நுட்பம்

மற்ற அறிக்கைகள் சியோமி மி மிக்ஸ் 2 சாதனத்தின் பயோமெட்ரிக் லாக் மற்றும் கைரேகை ஸ்கேனர் ஆகிய அம்சங்கள் முற்றிலும் 3டி பேஸ் ரிக்கனைஷேஷன் தொழில்நுட்பம் கொண்டு அறிமுகப்படுத்தலாம் என்று கூறுகின்றன.

6.2 அங்குல டிஸ்பிளே

6.2 அங்குல டிஸ்பிளே

அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போன் 2960 x 1440 பிக்சல்கள் என்ற தீர்மானம் கொண்ட ஒரு 6.2 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கலாம். மேலும் 6ஜிபு ரேம் மூலம் ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 836 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

4400எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் இக்கருவி ஒரு 8 ஜிபி ரேம் மாறுபாட்டிலும் வெளியாகலாமென்று இதர அறிக்கைகள் கூறுகின்றன. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் சமீபத்திய மியூஐ 9 ஓஎஸ் கொண்டு இயங்கலாம்.

அதிகாரப்பூர்வ வெளியீடு

அதிகாரப்பூர்வ வெளியீடு

சீனாவில் வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் மி சிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, அதே வெளியீட்டு தேதி நாளை சுற்றித்தான் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் கருவிகளை வெளியீட திட்டமிட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi MIX 2 front panel leak confirms thinner bezels, no home button. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X