5500எம்ஏஎச் பேட்டரியுடன் மிரட்டலான சியோமி மி மேக்ஸ் 3 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட் டிவி மற்றும் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை சமீபத்தில் மிக அதிகமாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்தவரிசையில் சியோமி மி மேக்ஸ் 3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில்
அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். குறிப்பாக பெரிய டிஸ்பிளே அம்சத்துடன் இந்த மிரட்டலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
மேலும் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் கருப்பு, தங்கம், நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் இன்றும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த ஸ்மார்ட்போன் மாடல் நாளை முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்:
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்ப ஆண்ட்ராய்டு
8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன்
மாடல் வெளிவந்துள்ளது.

கேமரா:
சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, குறிப்பாக பின்புற
கேமராவில் சோனி IMX363 சென்சார் அமைப்பு உள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:
இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இதனுள் 5500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.16,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications