Home
Mobile

5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன்710 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூலை 19-ம் தேதி அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த 5400எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் செய்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் டூயல் கேமரா அமைப்பு போன்ற வசதிகளுடன் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி மேக்ஸ் 3 :

சியோமி மி மேக்ஸ் 3 :

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.99-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம்
மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளா பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன்710 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில்
இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா
20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள்
இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பேட்டரி:

பேட்டரி:

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 5400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்
பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Max 3 With 5400mAh Battery is Launching on July 19: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X