20எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி மேக்ஸ் 3.!
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் சியோமி மி மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கைரேகை சென்சார் மற்றும் டூயல் கேமரா வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி மேக்ஸ் 3 :
சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.99-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளா பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன்710 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications