6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 636 SoC உடன் சியோமி மி மேக்ஸ் 3.!

இந்நிலைப்பாட்டில் சியோமி மி மேக்ஸ் 3 ஆனது சத்தமின்றி சீன ஸ்மார்ட்போன் கட்டுப்பாட்டு தளமான TENAA சான்றிதழை பெற்றுள்ளது.

|

சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லீ ஜூன்,நிறுவனத்தின் அடுத்த ப்ஹாப்ளெட் ஆன மி மேக்ஸ் 3 ஆனது வருகிற ஜூலையில் தொடங்குகிம் என்று கூறியதோடு சரி, அதன்பின்னர் அந்த ப்ஹாப்ளெட் தொடர்பான எந்த தகவலும் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை. இந்நிலைப்பாட்டில் சியோமி மி மேக்ஸ் 3 ஆனது சத்தமின்றி சீன ஸ்மார்ட்போன் கட்டுப்பாட்டு தளமான TENAA சான்றிதழை பெற்றுள்ளது.

6ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 636 SoC உடன் சியோமி மி மேக்ஸ் 3.!

ஒழுங்குபடுத்தும் பட்டியலில் மி மேக்ஸ் 3 ஆனது M1804E4C, M1804E4T, மற்றும் M1804E4A ஆகிய மூன்று வகைகளில் காணப்பட்டுள்ளது. இந்த மாடல் எண்கள் ஆனது சீனாவின் 3சி சான்றிதழ் எண்களுடன் ஒற்றுபோகவில்லை என்பதால், 3சி சான்றிதழில் காணப்பட்ட மாடல் எண்களை மற்ற சியோமி ஸ்மார்ட்போன்களாக எடுத்துகொல்வது நல்லது.

TENAA-வில் பட்டியலிடப்பட்டுள்ள அம்சங்களை பொறுத்தவரை, மி மேக்ஸ் 3 ப்ஹாப்ளெட் ஆனது ஒரு பெரிய 6.9 இன்ச் க்வாட் டிஸ்பிளே கொண்டிருக்கும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியான TENAA பட்டியலின் படி, மி மேக்ஸ் 3 ஆனது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதத்துடன் கூடிய முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். ஸ்மார்ட்போனின் இதயத்தில், ஒரு 1.8GHz செயலி இருக்கும். சியோமி நிறுவனமானது அதன் புதிய மி மேக்ஸ் ஸ்மார்ட்போனில், அதன் சமீபத்திய ரெட்மீ நோட் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் செயலியை பயன்படுத்தும் பழக்கம் கொண்டுள்ளதால் எதிர்பார்த்தபடி, அது ஸ்னாப்டிராகன் 636 SoC வழியாக இயங்குகிறது.

ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் கொண்டுள்ளதால், வரப்போகும் மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனும் அதே சிப்செட்டை தான் பயன்படுத்த வேண்டும். மொத்தம் மூன்று வகைகளில், வெவ்வேறு ரேம் மற்றும் சேமிப்பு மாடல்களின் கீழ் வெளியாகும். அதாவது M1804E4C மாடல் எண் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மாடலாக வெளிவரலாம். மறுகையில் உள்ள M1804E4T மற்றும் M1804E4A வகைகள் ஆனது 6ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் உடன் பல சேமிப்பு விருப்பங்களின் கீழ் - 32 ஜிபி, 64 ஜிபி, 128 ஜிபி - அறிமுகமாகலாம்.

மி மேக்ஸ் வரிசையானது பிரம்மாண்டமான பேட்டரி செயல்திறனுக்காக அறியப்படுகிறது. அது மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட 5400mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம். இதர அம்சங்களை பொறுத்தவரை (TENAA பட்டியலின்படி) மி மேக்ஸ் 3 ஆனது ஒற்றை பின்புற கேமரா, அதாவது ஒரு 12 எம்பி ரியர் கேமரா, 5 எம்பி செல்பீ கேமரா ஆகியவைகளை கொண்டிருக்கும். அதே நேரத்தில் மற்ற இரண்டு மாறுபாடுகலானது ஒரு 8 எம்பி செல்பீ கேமராவை காட்டுகின்றன. கடைசியாக, மி மேக்ஸ் 3 ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கொண்டு இயங்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Max 3 Specs Revealed by TENAA Listing, Snapdragon 636 SoC and 6GB RAM in Tow. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X