7 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளேவுடன் மிரட்டும் மி மேக்ஸ் 3.!

|

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட மி மேக்ஸ் சாதனம் வழியாக அதன் ப்ஹாப்ளெட் வரிசையை தொடங்கியது. மிகவும் பிரபலமடைந்த மி மேக்ஸ் ஆனது உலகளாவிய ரீதியில் 3 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையானது.

7 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளேவுடன் மிரட்டும் மி மேக்ஸ் 3.!

அந்த வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான சியோமி மி மேக்ஸ் 2 ஆனதும் பல ரசிகர்களை தன்பக்கம் பலவந்தமாக ஈர்த்தது. இந்த இரண்டு கருவிகளுக்கும் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து மி மேக்ஸ் 2 சாதனத்தின் அடுத்தகட்ட அப்டேட் சாதனம் வெளியாகவுள்ளது. ஆம். உங்கள் கணிப்பு சரியெனில் அடுத்தது வெளியாகப்போவது - சியோமி மி மேக்ஸ் 3 ப்ஹாப்ளெட் தான்.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

சீன போர்டல் ஆன சிஎன்எம்ஓ (cnmo) தளத்திலிருந்து வெளியான ஒரு லீக்ஸ் தகவலானது, சியோமி மி மேக்ஸ் 3 ஆனது அதன் முந்தைய தலைமுறை சாதனங்களை விட ஒரு பெரிய டிஸ்பிளே கொண்டிருக்கும் என்கிறது. அதாவது, மி மேக்ஸ் 3 ஆனது 18: 9 என்கிற காட்சி விகிதத்திலான ஒரு சாதனமாக இருக்கலாம்.

முழு எச்டி + டிஸ்ப்ளே

முழு எச்டி + டிஸ்ப்ளே

ஆக மொத்தம் கூறப்படும் மி மேக்ஸ் 3 ஆனது ஒரு 7 அங்குல முழு எச்டி + டிஸ்ப்ளே கொண்டுவரவுள்ளது. இந்த பிரதான மாற்றத்தை தவிர்த்து மி மேக்ஸ் 3 ஆனது அதன் முன்னோடிகளின் வடிவமைப்பு மொழியையே பின்தொடரும். மேலும், மிக் மேக்ஸ் 3 ஆனது இரண்டு வகைகளில் வரக்கூடும் எனவும் அறிக்கை கூறியுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி

அதாவது மி மேக்ஸ் 3 ப்ஹாப்ளெட்டின் முதல் வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி கொண்டும் மற்றொன்று ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி கொண்டும் இயக்கப்படும். மி மேக்ஸ் 2 வெளியாகும் முன்பும் கூட இதே மாதிரியான 2 வேரியண்ட்கள் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி உடனான ஒற்றை மாறுபாட்டில் தான் மி மேக்ஸ் 2 வெளியானது .

இரட்டை கேமரா அம்சம்

இரட்டை கேமரா அம்சம்

மி மேக்ஸ் 3 சாதனத்தின் கேமராத்துறையை பொறுத்தமட்டில், பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு சேர்க்கப்படலாம். ரூ.15,000/- பட்ஜெட்டில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள சியோமி ரெட்மீ நோட் ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அம்சம் இடம்பெறும் என்பதால், மி மேக்ஸ் 3 கருவியில் நிச்சயமாக டூயல் கேம் இடம்பெறும்.

கிட்டத்தட்ட ஒற்றுப்போகும்

கிட்டத்தட்ட ஒற்றுப்போகும்

மி மேக்ஸ் 3 சாதனமானது 2018-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்படலாம் அல்லது 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படலாம் என்பதும், சியோமி ரெட்மீ நோட் 3 மற்றும் ரெட்மேமீ நோட் 4 ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அம்சங்களும் மி மேக்ஸ் மற்றும் மிமேக்ஸ் 2 சாதனங்களின் அம்சங்களும் கிட்டத்தட்ட ஒற்றுப்போகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே கேமரா அமைப்பு

அதே கேமரா அமைப்பு

ஆக, சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி இணைக்கப்படலாம் என்பதால், மி மேக்ஸ் 3 சாதனத்தில் அதே ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி இடம்பெறலாம். மேலும், ரெட்மீ நோட் 5 ஒரு இரட்டை கேமரா அமைப்பை சேர்க்கிறது என்றால் மி மேக்ஸ் 3 சாதனத்தில் அதே கேமரா அமைப்பு இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Max 3 Rumoured to Feature a 7-inch Full HD+ Display and Snapdragon 630 SoC. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X