5400 எம்ஏஎச் பேட்டரி, 6 ஜிபி ரேம் உட்பட சியோமி மி மேக்ஸ் 3 ப்ரோ-வின் முழு அம்சங்களும் வெளியானது.!

ஒரு புதிய மற்றும் ஒரு சுவாரசியமான லீக்ஸ் தகவலானது மி மிக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளிப்படுத்தியுள்ளது.

|

சியோமி நிறுவனத்தின் அடுத்த பெரிய வெளியீடாக கருதப்படும் சியோமி மி மேக்ஸ் 3 ப்ரோ ப்ஹாப்ளெட்டின் லீக்ஸ் அம்சங்கள் ஆன்லைனை சுற்றிவரும் நிலைப்பாட்டில், புதிதாக வெளியாகியுள்ள ஒரு லீக்ஸ் தகவல் ஆனது.. "கண்ணா ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா.?" என்கிற மனக்குரலை கிளப்பு விடும் வண்ணம் உள்ளது.

சியோமி மி மேக்ஸ் 3 ப்ரோ-வின் முழு அம்சங்களும் வெளியானது.!

புகைப்படம் : ஸ்லாஷ்லீக்ஸ்

ஒரு புதிய மற்றும் ஒரு சுவாரசியமான லீக்ஸ் தகவலானது மி மிக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளிப்படுத்தியுள்ளது. ஆக கடந்த காலத்தில் வெளியானது போலவே இம்முறையும் இரண்டு பதிப்புகளில் மி மேக்ஸ் 3 வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. அதாவது நிலையான மி மேக்ஸ் 3 மற்றும் சற்று கூடுதல் அம்சங்கள் கொண்ட மி மேக்ஸ் 3 ப்ரோ அறிமுகம் ஆகும்.

ஸ்லாஸ்லீக்ஸ் வழியாக வெளியாகியுள்ள மி மேக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் புகைப்படத்தின் வழியாக அதன் முழுமையான அம்சங்களை அறிந்துகொள்ள முடிகிறது. இது முந்தைய வதந்திகளின்படி, ஸ்னாப்டிராகன் 710 எஸ்ஓசி கொண்டு இயங்கவேண்டும். இது க்வால்காம் நிருவனத்தின் சமீபத்திய மற்றும் சக்திவாய்ந்த ஹை-எண்ட் சிப்செட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்சங்களை பொறுத்தவரை 6.9 இன்ச் முழு எச்டி+ டிஸ்பிளே, ஒரு 5400எம்ஏஎச் பேட்டரி மற்றும் பின்புறத்தில் சோனியின் IMX363 முதன்மை சென்சார் ஆகியவைகளை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு மாடலில் வெளியாகும் என்பதும், அது மி மேக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள மி மேக்ஸ் 3 ஆனது வெவ்வேறு ரேம் மற்றும் சேமிப்பு விருப்பங்களில் வரலாம்.

அதாவது 4 ஜிபி / 6 ஜிபி ரேம் என்று வரும்போது 64 ஜிபி உள் சேமிப்புடன் இணைக்கப்படலாம். மொத்தத்தில், மி மேக்ஸ் 3 ஆனது 4ஜிபி / 64ஜிபி, 6ஜிபி / 64ஜிபி ரேம் வகைகளிலும், மறுகையில் உள்ள ப்ரோ மாடல் ஆனது 6ஜிபி / 128ஜிபி சேமிப்பக விருப்பத்துடனும் வாங்க கிடைக்கும்.மி மேக்ஸ் 3 ஆனது வழக்கமான க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 636 எஸ்ஓசி மூலம் இயக்கப்பட, ப்ரோ மாடல் ஆனது ஸ்னாப்ட்ராகன் 710 எஸ்ஓசி கொண்டு இயங்கலாம்.

கடந்த காலத்தில் வெளியான லீக்ஸ் தகவலானது, சியோமியின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களின் 'ப்ரோ' மற்றும் 'பிளஸ்' வகைகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறியது. ஆனால், அப்படியொன்றும் நடக்கவில்லை. உதாரணமாக, சியோமி மி 8 ஆனது மி 8 ப்ளஸ் மற்றும் மி 8 எக்ஸ்ப்ளோரர் பதிப்பின் கீழ் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மி 8 மட்டுமே தொடங்கப்பட்டது. எனவே, மி மேக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான வெளியீடு நிகழ்வதில் குறைவான வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Max 3 Pro Specifications Leaked Online, Snapdragon 710 SoC and 6GB RAM in Tow. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X