6.99-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி மேக்ஸ் 3.!
சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்சமயம் இணையத்தில் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனில் 18:9என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது மேலும் பெசல்-லெஸ் வடிவமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
இக்கருவி 6.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1080 பிகச்ல் தீர்மானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படலாம், அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 5,500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications