எல்லா ஸ்மார்ட்போன்களும் ஓரம்போ; முரட்டுத்தனமான மி மேக்ஸ் 3 வருகிறது.!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை வெளிப்படையாக ஆளும் சியோமி நிறுவனமானது ஏற்கனவே அதன் "முரட்டுத்தனமான" மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதே மிகப்பெரிய செய்தியாக இருக்கும் நிலைப்பாட்டில், அந்த சாதனம் பற்றிய ஒரு சில விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

எல்லா ஸ்மார்ட்போன்களும் ஓரம்போ; முரட்டுத்தனமான மி மேக்ஸ் 3 வருகிறது.!

புகைப்படம்: எக்ஸ்டிஏ டெவலப்பர்ஸ்

இது மி மேக்ஸ் 3 மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைக்கிறது என்றே கூறவேண்டும். அதிலும் ஒரு சூப்பரான சியோமி ஸ்மார்ட்போனை வாங்கிட வேண்டுமென நினைக்கும் சியோமி பிரியர்களுக்கு டபுள் குஷியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்காளாக சியோமி நிறுவனத்தின் மி 7 மற்றும் மி மிக்ஸ் 2எஸ் போன்ற ஸ்மார்ட்போன்களை பற்றி வெளியான அனைத்து தகவல்களையும் ஒன்றுமில்லாமல் செய்து விட்டது இன்று வெளியாகியுள்ள மி மேக்ஸ் 3 - அம்சங்கள் பற்றிய லீக்ஸ்.!

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

வெளியான தகவலின்படி மி மேக்ஸ் 3 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மற்றும் 6 ஜிபி அளவிலான ரேம் கொண்டு இயங்கும். அதுமட்டுமின்றி மி மேக்ஸ் 3 ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய கருவிகளில் காணப்படும் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும்.

ஐரிஸ் (கருவிழி) ஸ்கேனிங் ஆதரவு

ஐரிஸ் (கருவிழி) ஸ்கேனிங் ஆதரவு

உடன் இக்கருவி ஐரிஸ் (கருவிழி) ஸ்கேனிங் ஆதரவு கொண்டிருக்கும் என்றும் வெளியான அறிக்கை நீள்கிறது. எல்லாவற்றிக்கும் மேலாக சியோமி மி மேக்ஸ் 3 ஆனது ஒரு நம்பமுடியாத அளவிலான பேட்டரித்திறனை - அதாவது ஒரு 5500எம்ஏஏச் பேட்டரி - கொண்டிருக்கும்.

7 அங்குல முழு எச்டி + திரை

7 அங்குல முழு எச்டி + திரை

மேலும் மி மேக்ஸ் 3 ஆனது ஒரு நவநாகரீக 18: 9 காட்சி விகிதம் கொண்டும் வெளியாகும். ஆனால் திரை அளவு தற்போது தெரியவில்லை. முந்தைய அறிக்கைகளின்படி, மேக்ஸ் 3 ஆனது 7 அங்குல முழு எச்டி + திரையை பரிந்துரைக்கின்றன, அது மிகவும் சாத்தியமான ஒன்றாகும்.

டூயல் கேமரா

டூயல் கேமரா

வெளியான புகைப்படத்தின்படி மி மேக்ஸ் 3 ஆனது அதன் பின்பக்கம் கண்ணாடி உடல் அமைப்பை கொண்டுள்ளது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், மேக்ஸ் 3-ல் இடம்பெறும் கேமராக்கள் ஒரு சோனி ஐஎம்எக்ஸ்363 அல்லது ஒரு எஸ்5கே217 + எஸ்5கே5இ8 சாம்சங் டூயல் கேமரா தொகுதியை அதன் பின்புறத்தில் அமைக்கப்பெறலாம்.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

இதன் கைரேகை ஸ்கேனர் ஆனது தொலைபேசியின் பின்புறத்தில் வைக்கப்படும். முன்பக்கம் மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனிற்கான ஐரிஸ் ஸ்கேனிங் தொழில்நுட்பம் இடம்பெறும். இக்கருவியின் வெளியீட்டு தேதி இன்னும் கிடைக்கவில்லை, இருப்பினும் இது வருகிற மே மாதம் சீனாவில் அறிவிக்கப்படலாம். அதன் பிறகு ஜூலை மாதத்தில் இந்திய வெளியீடு நிகழலாம்.

பாஸ்ட் சார்ஜ் ஆதரவு

பாஸ்ட் சார்ஜ் ஆதரவு

இறுதியாக, மி மேக்ஸ் 3 ஆனது நிறுவனத்தின் மியூஐ 9 உடன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையில் இயங்குமென கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஐஆர் பிளாஸ்டர், இரட்டை சிம் ஆதரவு, 5500எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜ் ஆதரவு மற்றும் மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் உள்ளதுபோன்ற ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவைகள் இடம்பெறும்.

கவனம்

கவனம்

எந்தவிதமான ஆடம்பரமும், எந்த விதமான உயர்மட்ட அம்சங்களையும் தனது கருவிகளில் திணிக்காமல் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தி வந்த சியோமியின் மாறுபட்ட நடவடிக்கையாக மி மேக்ஸ் 3 திகழும் என்பது உறுதியாகியுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)
சீனாவிலும், இந்தியாவிலும்

சீனாவிலும், இந்தியாவிலும்

கடந்த ஆண்டு வெளியான மி மேக்ஸ் ஆனது சந்தையில் நிலவும் நிறுவனத்தின் கைபேசிகளின் நோக்கத்தை மாற்றியமைத்ததை போலவே இக்கருவியும் சீனாவிலும், இந்தியாவிலும் நுகர்வோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல சியோமி ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Max 3 Expected to Feature Snapdragon 660 SoC, 5500mAh Battery and Wireless Charging. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X