இன்று அறிமுகம் : சியோமி மி மேக்ஸ் 2 (விலை மற்றும் அம்சங்கள்).!
இந்த மி மேக்ஸ் 2 ஒரு பெரிய 6.44 அங்குல காட்சி கொண்டு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சியோமி மி மிக்ஸ் கருவியின் அப்கிரேட்டட் சாதனமாகும்.
சியோமி நிறுவனத்தின் மி மேக்ஸ் 2 பஹாப்ளேட் இன்று (வியாழன்) சீனாவில் ஒரு நிகழ்வில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் இந்த மி மேக்ஸ் 2 ஒரு பெரிய 6.44 அங்குல காட்சி கொண்டு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட சியோமி மி மிக்ஸ் கருவியின் அப்கிரேட்டட் சாதனமாகும்.
சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களில் சுமார் 1.5 மில்லியன் மி மேக்ஸ் அலகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று சீன வர்த்தக நிறுவனம் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது. எனவே சியோமி மி மேக்ஸ் 2 கருவியும் அதே அளவிலான வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமில்லை. இக்கருவியின் அம்சம்களும் அதைத்தான் பறைசாற்றுகின்றன
இக்கருவி சார்ந்து இதுவரை வெளியாகியுள்ள கசிவுகள் ஏற்கனவே இந்த புதிய சாதனத்தில் என்னென்ன அம்சங்கள் எதிர்பார்க்கலாம்.? அல்லது இடம்பெறலாம் என்பது பற்றிய ஒரு நியாயமான யோசனை நமக்கு அளித்துள்ளது.

இரண்டு வகை
சியோமி மி மேக்ஸ் 2 கருவியானது ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி உடனான 4ஜிபி ரேம் மாறுபாடு மற்றும் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடனான 6ஜிபி ரேம் மாறுபாடு என இரண்டு வகைகளில் வெளியாகலாம்.

விலை நிர்ணயம்
மேலும் இந்த இரண்டு மாறுபாடுகளும் முறையே சுமார் ரூ 14,000/- மற்றும் சுமார் ரூ.15,900/- என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்றும் கிஸ்மோசீனா லீக்ஸ் தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

கேமரா
6.4 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்ட மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்378 (IMX378) சென்சார் 12 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்ட இந்த புதிய மி மேக்ஸ் 2 கருவியானது 5 மெகாபிக்சல் முன் கேமரா பக்க கேமரா கொண்டுள்ளது.

சந்தை
முந்தைய மி மேக்ஸ் கருவியை போலவே, இக்கருவி சீனாவிற்கு வெளியேயும் கூட சந்தையை சந்திக்க வாய்ப்புள்ளது. மேலும் சியோமி நிறுவனம் மி மேக்ஸ் 2-வின் 128ஜிபி சேமிப்பு மாதிரியையும் அறிமுகப்படுத்தும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

உலோக உடல்
மேலுமொரு ஒரு சமீபத்திய கசிவு, இக்கருவி ஒரு பாரிய 5349எம்ஏஎச் பேட்டரி பேக் கொண்டுள்ளது என்று கூறுகிறது. மேலும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடனான அனைத்து உலோக உடல் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கைரேகை ஸ்கேனர்
மேலும் லீக்ஸ் தகவலின் கீழ் சாதனத்தின் மேல் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஒன்று இடம்பெறும் மற்றும் அதன் முன்னோடியை போலவே நடுவில் கைரேகை ஸ்கேனர் அமைத்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
(புகைப்படங்களில் இருப்பது மி மேக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது)


Click it and Unblock the Notifications