Home
Mobile

இந்தியாவில் இன்று அறிமுகம் : 5300எம்ஏஎச் பேட்டரியுடன் மி மேக்ஸ் 2.!

மி மேக்ஸ் 2 ஆனது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட அசல் மி மேக்ஸின் வாரிசு ஆகும்.

By Muthuraj

கடந்த வாரம், சியோமி இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக டீஸ் செய்தது. அதை உறுதி செய்யும் வண்ணம் சியோமி நிறுவனம் இன்று இந்தியாவில் நடக்கும் நிகழ்வொன்றில் அதன் மிக் மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அசல் மி மேக்ஸ் சாதனத்தின் அடுத்த மாறுபாடு தான் இக்கருவி என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் ப்ஹாப்ளெட் பிரிவின் கீழ் வெளியாகும் ஸ்மார்ட்போன் கொண்டுள்ள அம்சங்கள் என்னென்ன மற்றும் இதன் விலை நிர்ணயம் என்ன என்பதை பற்றிய விவரங்கள் இதோ.

மி மேக்ஸ் 2

மி மேக்ஸ் 2

முன்னர் குறிப்பிட்டது போல, மி மேக்ஸ் 2 ஆனது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட அசல் மி மேக்ஸின் வாரிசு ஆகும். இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகும் மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விற்பனை, வரும் அடுத்த நாட்களில் நடக்கலாம்.

23 ஜூலை விற்பனை

23 ஜூலை விற்பனை

நினைவூட்டும் வண்ணம், சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின், நிறுவனம் ஜூலை 23 அன்று ஏதோ ஒற்றை றிவிக்க போவதாகவும், அவர்கள் ஜனவரி 23, மார்ச் 23 மற்றும் மே 23 ஆகிய நாட்களில் பெரும் விற்பனையை பெற்றுள்ளதாகவும், ரெட்மீ நோட் 4, ரெட்மீ 4ஏ மற்றும் ரெட்மீ 4 ஆகியவை ஒவ்வொன்றும் 250,000-க்கும் மேற்பட்ட யூனிட்களில் விற்பனையாகியுள்ளதாவும் தெரிவித்தார். இறுதியில், நாங்கள் மிக் மேக்ஸ் 2 சாதனத்தை நாட்டில் 23 ஜூலை விற்பனைக்கு செலுத்துவோம் என எதிர்பார்க்கலாம், ஆனால் அது சியோமி நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை பொறுத்தமட்டில் இந்த சாதனம் ஒரு 6.44 இன்ச் முழுஎச்டி 1080பி டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 652எஸ்ஓசி உடனான 4ஜிபி ரேம் பயன்படுத்துகிறது.

கேமரா

கேமரா

சீனாவில் இரண்டு வகை மாறுபாடுகளில் இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது - 64ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு. கேமரா துறையை பற்றி பேசுகையில் இக்கருவி பிடிஏஎப் (PDAF) ஆட்டோஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் மற்றும் எச்டிஆர் கொண்ட12எம்பி ரியர் கேமராவும், 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. ஒரு பாரிய 5300 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது.

விலை

விலை

மி மேக்ஸ் 2 சாதனத்தின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்க்கையில் பின்புறம் எதிர்கொள்ளும் கைரேகை சென்சார், ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட், ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஒரு ஐஆர் பிளாஸ்டர் ஒன்றும் உள்ளது. சீன விலை நிர்ணயத்தின்படி, சியோமி ம் இ மேக்ஸ் 2 ஆனது ரூ.16,000/-க்கும் (64ஜிபி) மற்றும் இந்தியாவில் ரூ.19,000/-க்கும் (128 ஜிபி) இக்கருவி விற்பனைக்கு வரலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Max 2 is launching today in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X