5300எம்ஏஎச் பேட்டரியுடன் மி மேக்ஸ் 2 : இந்திய வெளியீடு அறிவிப்பு.!

ஒரு புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்காக ஊடக அழைப்பிதழ்களையும் அனுப்ப நிறுவனம் துவங்கியுள்ளது. அந்த அழைப்பிதழ் "பெரியது" என்று கூறுகிறது. அப்படி என்னதான் பெரிய ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது.? எப்போது வெள

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆளும் சியோமி நிறுவனம் அடுத்த வாரம் இந்தியாவில் அதன் மி மேக்ஸ் 2 சாதனத்தை தொடங்குவதற்கு தயாராக உள்ளது. இந்த தகவல் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் ஒன்றின் வழியாக அறியப்படுகிறது. மற்றும் வெளியான வண்ணம் இருக்கும் தொடர் ட்வீட் வழியாக நாட்டில் ஒரு புதிய ஸ்மார்ட்போன்னை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதென்பது உறுதியாகிறது வருகிறது.

அதை இன்மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் நிறுவனம் 'சம்திங் இஸ் கம்மிங்" என்ற தலைப்புடன் வரவிருக்கும் வெளியீட்டை டீஸ் செய்து வருகிறது. மறுகையில், ஒரு புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்காக ஊடக அழைப்பிதழ்களையும் அனுப்ப நிறுவனம் துவங்கியுள்ளது. அந்த அழைப்பிதழ் "பெரியது" என்று கூறுகிறது. அப்படி என்னதான் பெரிய ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளது.? எப்போது வெளியாவுள்ளது.?? அதன் அம்சங்கள் தான் என்னென்ன.?

ஜூலை 18-ஆம் தேதி

ஜூலை 18-ஆம் தேதி

வெளியான ட்வீட் ஆனது ஜூலை 18-ஆம் தேதி புது தில்லியில் சியோமி அதன் மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யுமென்று தெரிவிக்கிறது. இது அதிகாரப்பூர்வமான தேதி இல்லை என்ற போதிலும், சீனாவில் கடந்த மே மாதம் இக்கருவி உத்தியோகபூர்வமாக சென்றது என நம்பப்படுகிறது.

மி மேக்ஸ் 2

மி மேக்ஸ் 2

குறிப்பாக, மி மேக்ஸ் 2 ஆனது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட அசல் மி மேக்ஸின் வாரிசு ஆகும். ஜூலை 18-ம் தேதி துவங்கப்படும் பட்சத்தில், மி மேக்ஸ் 2-வின் விற்பனை அதற்கு அடுத்த நாட்களில் நடக்கும்.

23 ஜூலை விற்பனை

23 ஜூலை விற்பனை

நினைவூட்டும் வண்ணம், சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின், நிறுவனம் ஜூலை 23 அன்று ஏதோ ஒற்றை றிவிக்க போவதாகவும், அவர்கள் ஜனவரி 23, மார்ச் 23 மற்றும் மே 23 ஆகிய நாட்களில் பெரும் விற்பனையை பெற்றுள்ளதாகவும், ரெட்மீ நோட் 4, ரெட்மீ 4ஏ மற்றும் ரெட்மீ 4 ஆகியவை ஒவ்வொன்றும் 250,000-க்கும் மேற்பட்ட யூனிட்களில் விற்பனையாகியுள்ளதாவும் தெரிவித்தார். இறுதியில், நாங்கள் மிக் மேக்ஸ் 2 சாதனத்தை நாட்டில் 23 ஜூலை விற்பனைக்கு செலுத்துவோம் என எதிர்பார்க்கலாம், ஆனால் அது சியோமி நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளை பொறுத்தமட்டில் இந்த சாதனம் ஒரு 6.44 இன்ச் முழுஎச்டி 1080பி டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 652எஸ்ஓசி உடனான 4ஜிபி ரேம் பயன்படுத்துகிறது.

கேமரா

கேமரா

சீனாவில் இரண்டு வகை மாறுபாடுகளில் இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது - 64ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு. கேமரா துறையை பற்றி பேசுகையில் இக்கருவி பிடிஏஎப் (PDAF) ஆட்டோஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் மற்றும் எச்டிஆர் கொண்ட12எம்பி ரியர் கேமராவும், 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. ஒரு பாரிய 5300 எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டுள்ளது.

விலை

விலை

மி மேக்ஸ் 2 சாதனத்தின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்க்கையில் பின்புறம் எதிர்கொள்ளும் கைரேகை சென்சார், ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட், ஒரு 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் ஒரு ஐஆர் பிளாஸ்டர் ஒன்றும் உள்ளது. சீன விலை நிர்ணயத்தின்படி, சியோமி ம் இ மேக்ஸ் 2 ஆனது ரூ.16,000/-க்கும் மற்றும் இந்தியாவில் ரூ.19,000/-க்கும் இக்கருவி விற்பனைக்கு வரலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Max 2 India launch likely pegged for July 18. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X