நிரந்தரமான விலைகுறைப்பில் சியோமி மி மேக்ஸ் 2, இந்தியாவில் மட்டும்.!
நிறுவன அறிக்கையின்படி, மி மேக்ஸ் 2 ஆனது, நோக்கியா 3310 (2017) சாதனத்தை விட இரண்டு மடங்கு அதிக பேச்சுநேரம் வழங்கும்.
சியோமி நிறுவனத்தின் சூப்பர் சைஸ் ப்ஹாப்ளெட் ஆன சியோமி மி மேக்ஸ் 2 சாதனத்திற்கு இந்தியாவில் மட்டும் ஸ்பெஷலாக விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பின் மூலம் நிறுவனத்தின் பெரிய டிஸ்பிளே ஸ்மார்ட்போன் ஆன மி மேக்ஸ் 2 இனி அனைவரின் பாக்கெட்களுக்கும் நுழையும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு முழுமையான உலோக வடிவமைப்பு கொண்ட மி மேக்ஸ் 2 ஆனது பின்புறம் ஏற்றப்பட்ட வட்டமான கைரேகை ஸ்கேனர் மற்றும் முன்புறத்தில் 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

32ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரி.!
கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரி, தற்போது ரூ.1000/- என்ற தள்ளுபடியை பெற்று ரூ.13.999/- என்ற விலைக்கு வாங்க கிடைக்கும்.

64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரி.!
மறுகையில் ரூ.16,999/- அறிமுகமான மிக் மேக்ஸ் 2 சாதனத்தின் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாதிரியானது, தற்போது ரூ.15,999/-கு கிடைக்கிறது. மேலும் ப்ளிப் கார்ட் வழங்குமொரு வாய்ப்பின்கீழ் ரூ.15,000/- வரை எக்ஸ்சேன்ஜ் சலுகையும் நீங்கள் பெறலாம்.

6.44 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே
சியோமி மி மேக்ஸ் 2 ஆனது கடந்த மே மாதத்தில் வெளிவந்த அசல் மாமி மேக்ஸ் சாதனத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான அப்டேட் சாதனமாகும். இந்த ஸ்மார்ட்போன் 1080x1920 பிக்சல்கள் (முழு எச்டி) தீர்மானம் கொண்ட 6.44 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.

பேட்டரி ஆயுள்
மி மேக்ஸ் 2 சாதனத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமான அதன் 5300எம்ஏஎச் பேட்டரியானது 2 நாட்களுக்கு வழக்கமான பயன்பாட்டிலான பேட்டரி ஆயுள் வழங்குகிறது. நிறுவன அறிக்கையின்படி, மி மேக்ஸ் 2 ஆனது, நோக்கியா 3310 (2017) சாதனத்தை விட இரண்டு மடங்கு அதிக பேச்சுநேரம் வழங்கும்.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்
க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 ப்ராஸசர் மூலம் இயங்கும் இக்கருவி ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 8 கொண்டு இயங்குகிறது மற்றும் இது வரவிருக்கும் நாட்களில் மியூஐ 9 அப்டேட் பெறலாம்.

12 மெகாபிக்சல் பின்புற கேமரா
கேமராத்துறையை பொறுத்தமட்டில், எப் / 2.2 துளை, ஆட்டோஃபோகஸ் மற்றும் ஒரு இரட்டை எல்இடி (இரட்டை தொனியில்) ஃப்ளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இது 4கே வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. முன்பக்கம், ஒரு 5 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications