வெறும் ரூ.249/-க்கு ஸ்மார்ட்போன் உட்பட பல சலுகைகள்; நாளையோடு முடிகிறது.!

மி.காம் வலைத்தளத்தில் இன்று தொடங்கிய சியோமி மி ரசிகர் திருவிழா, நாளை, ஏப்ரல் 6 அன்று முடிவடைகிறது.

|

மி.காம் வலைத்தளத்தில் இன்று தொடங்கிய சியோமி மி ரசிகர் திருவிழா, நாளை, ஏப்ரல் 6 அன்று முடிவடைகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பாகங்கள் மீது நம்பமுடியாத பல சலுகைகள் மற்றும் தள்ளுபடி பட்டியலிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கார்ட் கொண்டு ஷாப்பிங் செய்பவர்களுக்கு 5% உடனடி தள்ளுபடி கிடைக்கும். உடன் கோபிபோ வழங்கும் வாய்ப்பின்கீழ் உள்நாட்டு விமான டிக்கெட்களின் மீது ரூ.600/- சலுகை, சர்வதேச விமான டிக்கெட்களின் மீது ரூ.2,000/- சலுகை மற்றும் உள்நாட்டு ஹோட்டல்களில் 20 சதவிகித தள்ளுபடி ஆகியவைகள் கிடைக்கும்.

சியோமி ரெட்மீ 5 ப்ரோ மீதான தள்ளுபடி மற்றும் சலுகைகள்

சியோமி ரெட்மீ 5 ப்ரோ மீதான தள்ளுபடி மற்றும் சலுகைகள்

சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ வாங்குவோர்களுக்கு இலவசமாக ஒரு ஜோடி மி ஹெட்செட்ஸ் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாடல் ஆனது ரூ.13,999/-க்கு கிடைக்கிறது. மறுகையில் உள்ள 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.16,999/-க்கு வாங்க கிடைக்கிறது.

மி மிக்ஸ் 2, மி மேக்ஸ் 2, ரெட்மீ 4 மீதான தள்ளுபடி மற்றும் சலுகைகள்

மி மிக்ஸ் 2, மி மேக்ஸ் 2, ரெட்மீ 4 மீதான தள்ளுபடி மற்றும் சலுகைகள்

தவிர சியோமி மி மிக்ஸ் 2, சியோமி மி மேக்ஸ் 2 மற்றும் சியோமி ரெட்மீ 4 ஆகிய ஸ்மார்ட்போன்களின் மீதும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அதாவது, ரூ.3000/- குறைக்கப்பட்டு மி மிக்ஸ் 2 ஆனது ரூ.29,999/-க்கும், ரூ.1000/- குறைக்கப்பட்டு மி மேக்ஸ் 2 ஆனது ரூ.12,999/-க்கும் மற்றும் ரூ.500/- குறைக்கப்பட்டு ரெட்மீ 4 ஆனது ரூ.6,999/-க்கும் வாங்க கிடைக்கும்.

மி எல்இடி ஸ்மார்ட் டிவி.!

மி எல்இடி ஸ்மார்ட் டிவி.!

இந்த விற்பனையில், மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4 55-இன்ச் (ரூ.39,999), மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 43-இன்ச் (ரூ.22,999) மற்றும் மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 32-இன்ச் (ரூ.13,999) போன்ற சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் டிவிக்களும் வாங்க கிடைக்கும்.

ரெட்மீ நோட் 5, ரெட்மீ  5.!

ரெட்மீ நோட் 5, ரெட்மீ 5.!

ரெட்மீ நோட் 5 ஆனது மொத்தம் இரண்டு வகைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு மாடலானது ரூ.9,999/-க்கும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.11,999/-கும் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள ரெட்மீ 5 ஆனது ரூ.7,999/-ல் தொடங்குகிறது. கூடுதலாக, சியோமி ரெட்மீ Y1, ரெட்மீ Y1 லைட் மற்றும் ரெட்மீ 5ஏ ஆகிய ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு உள்ளன.

சியோமி கிரேசி காம்போ சலுகைகள்.!

சியோமி கிரேசி காம்போ சலுகைகள்.!

இந்த சியோமி கிரேசி காம்போ திருவிழாவில் சில நம்பமுடியாத சலுகையை கிடைக்கும். எ=இந்த வாய்ப்பின் கீழ், ஒரு ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் மற்றும் ஒரு மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 32 இன்ச் ஆகிய இரண்டையும் வெறும் ரூ.5,999/-க்கு வாங்கலாம். இதேபோல மி பேண்ட்-HRX பதிப்பு மற்றும் மி பேண்ட் ஸ்ட்ராப்- HRX பதிப்பை வெறும் ரூ.199/-க்கு வாங்கலாம். மி ப்ளூடூத் ஸ்பீக்கர் பேசிக் 2 மற்றும் மி ஹெட்செட் பேசிக் ஆகிய இரண்டையும் ரூ.399/-க்கு வாங்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மி பேண்ட் 2, மி பாடி கம்போசிஷன் ஸ்கேல்

மி பேண்ட் 2, மி பாடி கம்போசிஷன் ஸ்கேல்

ஏப்ரல் 6-ஆம் தேதியன்று ரெட்மி Y1 லைட் + ரெட்மி Y1 லைட் சாப்ட் கேஸ் ஆகியவைகள் ரூ.249/-க்கும், மி பேண்ட் 2 +மி பாடி கம்போசிஷன் ஸ்கேல் ஆகியவைகளை ரூ.1,799/-க்கும் மற்றும் மி ஏர் ப்யூரிபையர் 2 + மி ஏர் ப்யூரிபையர் பில்டர் ஆகியவைகளை ரூ.2,499/-க்கும் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Fan Festival till tomorrow: Offers on Redmi Note 5 Pro, Mi Mix 2, ‘Crazy Combo’ deals. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X