Home
Mobile

சியோமி அறிமுகம் செய்துள்ள இரண்டு அசத்தலான பொருட்கள் என்ன தெரியுமா?

இந்த மி செல்பி ஸ்டிக் டிரைபாட் என்பது செல்பி ஸ்டிக் மற்றும் ட்ரைபாட் ஸ்டாண்ட் ஆகியவை ஒருங்கே அமைந்தது ஆகும்.

By Siva Lingam

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிரெளடுஃபண்டிங் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மேலும் புதியதாக சியோமி மி செல்பி ஸ்டிக் டிரைபாட் மற்றும் மி புளூடூத் ஆடியோ ரீசிவர் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பொருட்கள் இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து விற்பனையாகி, ஆர்டர் செய்பவர்களுக்கு டெலிவரி செய்து வருகிறது.

சியோமி அறிமுகம் செய்துள்ள இரண்டு அசத்தலான பொருட்கள் என்ன தெரியுமா?

கடந்த மாதம் சியோமி நிறுவனம் மி கிரெளட்ஃபண்டிங் சேவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது என்பது தெரிந்ததே. இதன் மூலம் சியாமி தயாரிப்புகள் இந்தியர்களுக்கு எளிதில் சென்றடைகிறது. இந்த நிலையில் சியோமி நிறுவனம் இரண்டு புதிய பொருட்களை முதலில் அறிமுகம் செய்துள்ளது. மி செல்பி ஸ்டிக் டிரைபாட் மற்றும் மி புளூடூத் ஆடியோ ரிசீவர். இந்த இரண்டு பொருட்களையும் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை ஆர்டர் செய்தால் அதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என்று 100% உறுதியளிக்கின்றது. இந்த நிலயில் இந்த இரண்டு பொருட்களையும் தற்போது மி.காம் என்ற இணையதளத்தில் எளியில் பெற்றுக்கொள்ளலாம்.

சியோமி அறிமுகம் செய்துள்ள இரண்டு அசத்தலான பொருட்கள் என்ன தெரியுமா?

மி செல்பி ஸ்டிக் டிரைபாட்:
இந்த மி செல்பி ஸ்டிக் டிரைபாட் என்பது செல்பி ஸ்டிக் மற்றும் ட்ரைபாட் ஸ்டாண்ட் ஆகியவை ஒருங்கே அமைந்தது ஆகும். இந்த ஸ்டிக்கில் புளூடுத் ஷட்டர் வசதி உள்ளது. இது புளூடூத் 3.0, ஆண்ட்ராய்டு 4.3 மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களிலும் ஐஒஎஸ் 5.0 மற்றும் அதற்கு மேல் உள்ள வெர்ஷன்களிலும் செயல்படும்

இந்த செல்பி ஸ்டிக் அலுமினியத்தில் செய்யப்பட்டுள்ளதால் உறுதியுடன் இருப்பது மட்டுமின்றி அதன் நீளத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த ஸ்டிக் மொபைல்போனை 360 டிகிரிக்கும் சுற்ற உதவுவதோடு, இதன் அகலம் 56 முதல் 89 மிமீ உள்ளது. உதாரணமாக 88.3 மிமி அகலம் உள்ள சியாமி மி மேக்ஸ் போனை எளிதில் பயன்படுத்தலாம்.

சியோமி அறிமுகம் செய்துள்ள இரண்டு அசத்தலான பொருட்கள் என்ன தெரியுமா?

மி புளூடூத் ஆடியோ ரிசீவர்
இந்த மீ புளூடூத் ஆடியோ ரிசீவர் ஒரு புளூடூத் டிவைஸ் மட்டுமின்றி இது3.5மிமி ஆடியோ ஜேக்காக சப்போர்ட் செய்கிறது. இதில் தனித்தன்மையுடைய ஏஎம்பி சிப், பேட்டரி, பிளக் மற்றும் ப்ளே உள்ளது. இதில் உள்ள 97mAh பேட்டரி, 4-5 மணி நேரம் ஆடியோ பிளே செய்ய உதவுகிறது.

ஒரே ஒரு கீ மூலம் இதன் ஆடியோவை ஆன் மற்றும் ஆப் செய்யாலாம். மேலும் அதே கீ மூலம் மொபைல் மற்றும் மற்ற புளூடூத் டிவைஸ்களில் கனெக்ட் செய்யலாம். மேலும் இந்த ரீச்வர் புளூடூத் 4.2 டிரான்ஸ்மிசனில் சப்போர்ட் செய்யும். அதுமட்டுமின்றி இந்த ரிசீவரை ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களில் கனெக்ட் செய்யலாம்,. இந்த டிவைசின் எடை வெறும் 10 கிராம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.ல்

விலை என்ன தெரியுமா? இந்த சியோமி மி செல்பி ஸ்டிக் டிரைபாட் விலை ரூ.1099 என்பதும் இந்த பொருள் மி.காம் இணையதளத்தில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் மி புளூடூத் ஆடியோ ரீசிவர் விலை ரூ.999 இந்த பொருளும் அதே இணையதளத்தில் கிடைக்க்கும்

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Crowdfunding: Mi Selfie Stick Tripod, Mi Bluetooth Audio Receiver now available in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X