108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.! வியக்கவைக்கும் விலை.!

|

சியோமி நிறுவனம் சீனாவில் தனது புதிய மற்றும் மெர்சலான சியோமி மி சிசி9 ப்ரோ (Mi CC9 Pro) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிகளவு எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் என்றே கூறலாம் இப்போதுது இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.47-இன்ச்முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னப்டிராகன் 730ஜி

ஸ்னப்டிராகன் 730ஜி

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மி சிசி9 ப்ரோ ஆனது 2.2ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னப்டிராகன் 730ஜி சிப்செட் அடிப்படையாக கொண்டு வெளிந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

கேமரா வசதி:

கேமரா வசதி:

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் பின்புறம்
108எம்பி பிமைரி கேமரா-1/1.33″ f/1.69 1.6μm OIS

20எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா -117° field of view f/2.2

5எம்பி டெலிபோட்டோ - f/2.0 5x optical zoom, 10x hybrid zoom, 50x digital zoom OIS

12எம்பி - Samsung S5K2L7 dedicated போர்ட்ரைட் கேமரா-f/2.0 1.4μm

2எம்பி மேக்ரோ லென்ஸ் - 1.5cm minimum focus distance f/2.4 -என ஐந்து கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இவற்றுள் 32எம்பி செல்பீ கேமராஇடம்பெற்றுள்ளது.

5260எம்ஏஎச் பேட்டரி

5260எம்ஏஎச் பேட்டரி

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 30வாட் பாஸ்ட் சார்ஜிங்வசதியும் உள்ளது. மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை,ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.!ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.!

சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி சிசி9 ப்ரோ 2799 யுவான் (இந்திய மதிப்பில் 28,000/-)
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி சிசி9 ப்ரோ 3099 யுவான் (இந்திய மதிப்பில் 31,200/-)
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட சியோமி மி சிசி9 ப்ரோ 3499 யுவான் (இந்திய மதிப்பில் 35,000/-)

Best Mobiles in India

English summary
சியோமி நிறுவனம் சீனாவில் தனது புதிய மற்றும் மெர்சலான சியோமி மி சிசி9 ப்ரோ (Mi CC9 Pro) மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X