ஆகஸ்ட் 23: இந்தியா-மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சியோமி நிறுவனம் இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி தனது மிரட்டலான சியோமி மி ஏ3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா அமைப்பு மற்றும் அதிநவீன மென்பொருள் அம்சங்களுடன் வெளிவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அசத்தலான டிஸ்பிளே:
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.08-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட் வசதி:
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் அட்ரினோ 610ஜிபியு வசதியும் உள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி:
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேமரா அமைப்பு:
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி ரியர் கேமரா+ 8எம்பி செகன்டரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது,பின்பு 32எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பு வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை:
இந்திய மதிப்பில்...
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,500-ஆக உள்ளது, அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications