ஜியோ வழங்கும் 4.5டிபி டேட்டா & 2000 கேஷ்பேக் உடன் சியோமி மி ஏ2 முன்பதிவு ஆரம்பம்.!
சியோமி நிறுவனத்தின் புதிய அறிமுகம் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன். சியோமி பயனர்களை இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்க செய்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் இன்று ப்ரீ புக்கிங் செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய அறிமுகம் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன். சியோமி பயனர்களை இந்த ஆண்டில் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்க செய்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் இன்று ப்ரீ புக்கிங் செய்யப்படுகிறது.

இன்று மதியம் 12 மணிக்கு மி ஸ்டோர் மற்றும் அமேசான் வலைத்தளத்தில் தனது புக்கிங்கை தொடங்குகிறது சியோமி நிறுவனம். தொடக்க விற்பனையாகக் குறைவான ஸ்டாக்கள் மட்டுமே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முந்துவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சியோமி மி ஏ2
சியோமி மி ஏ2 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்புடனும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்பு வேரியண்ட் உடன் விற்பனைக்கு வருகிறது. அடர் சாம்பல் மற்றும் கருப்பு என இரண்டு நிறத்தில் வருகிறது. உங்கள் புதிய சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் ஐ Mi.com மற்றும் amazon.in இல் வாங்கலாம்.

ஆகஸ்ட் 12 முதல் ஷிப்பிங்
ஆகஸ்ட் 12 முதல் ஷிப்பிங் தொடங்குகிறது என அமேசான் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்துடன் ஆகஸ்ட் 16 க்கு முன்னாள் அனைத்து ஆர்டர்களும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துவிடப்படும் என்று அமேசான் உறுதியளித்துள்ளது.

கேஷ் ஆன் டெலிவரி
ப்ரீ புக்கிங் காரணத்தினால் கேஷ் ஆன் டெலிவரி சேவை கிடையாது என்று அமேசான் உறுதியாகத் தெரிவித்திருக்கிறது. அனைத்துப் பரிவர்த்தனைகளும் ஆன்லைன் வழி செய்து, உங்கள் ஸ்மார்ட்போன்களை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

ரூ.2,000 சலுகை மற்றும் 4.5டிபி இலவச டேட்டா
நம்பவே முடியாத அட்டகாசமான ஆஃபராக ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 சலுகை மற்றும் 4.5டிபி இலவச டேட்டா வழங்கப்படுமென்றும் தெரிவித்துள்ளது. இத்துடன் சியோமி மி ஏ2 பிரீமியம் சாப்ட் கேஸ் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications