5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சியோமி மி ஏ2.!
இதற்கு முன்பு வந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் ஆனது 5.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
சியோமி நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி விரைவில் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்திய சந்தையில் அpதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிவப்பு நிற பதிப்புக் கொண்ட புகைப்படம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்கைப் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 2910எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இதற்கு முன்பு வந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் ஆனது 5.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3080எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டுள்ளது இந்த சியோமி மி ஏ1 சாதனம்.

சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் இந்த சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டூயல் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications