Home
Mobile

இந்தியா: விரைவில் களமிறங்கும் சியோமி மி ஏ2, ரெட்மீ வ்யை2.!

சியோமி மி ஏ2 சாதனத்தில் 20எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

சியோமி ஸ்மார்ட்போன் மாடல்கள் பொறுத்தவரை இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது சியோமி நிறுவனம். மேலும் தற்சமயம் அந்நிறுவனம் சார்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது, அதன் அடிப்படையில் சியோமி மி ஏ2 மற்றும் சியோமி வ்யை2
ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சியோமி மி ஏ2 மற்றும் சியோமி வ்யை2 ஸ்மார்ட்போன் சாதனங்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

சியோமி மி ஏ2 மற்றும் சியோமி வ்யை2 ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக கைரேகை சென்சார் மற்றும் டூயல் ரியர் கேமரா வசதி
இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி ஏ2

சியோமி மி ஏ2

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி மி ஏ2 சாதனத்தில் 5.99-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பினே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும்
1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

சியோமி மி ஏ2 சாதனத்தில் 20எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இதனுடைய
செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுஇவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி மி ஏ2 சாதனம் வெளிவரும்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 2910எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப்பற்றிய தகவல் வெளிவரவில்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A2 Redmi Y2 Expected to Launch in India Very Soon; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X