இந்தியாவில் மிரட்டலான சியோமி மி ஏ2 அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
சியோமி மி ஏ2 சாதனத்தில் 5.99-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பினே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனம் இன்ற சியோமி மி ஏ2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, குறிப்பாக இன்று மாலை 4மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என சியோமி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மி.காம் மற்றும் அமேசான் வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸமார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி ஏ2 :
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:
சியோமி மி ஏ2 சாதனத்தில் 5.99-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பினே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
சியோமி மி ஏ2 சாதனத்தில் 20எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி மி ஏ2 சாதனம் வெளிவரும்.

விலை:
சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போனில் 2910எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999 முதல் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications